Posts

Showing posts from September, 2019

ஜவ்வரிசி லட்டு செய்வது செய்வது எப்படி? விருத நாட்கள் ஸ்பெஷல் !!!

Image
ஜவ்வரிசி லட்டு தேவை:  ஜவ்வரிசி - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - அரை கப், பொடித்த சர்க்கரை - ஒரு கப், பாதாம், முந்திரி - தலா 10, நெய் - 6 டேபிள்ஸ்பூன். செய்முறை:  ஜவ்வரிசியை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை (குறைந்த தீயில் அடுப்பை வைத்து) வறுத்து ஆறியதும் மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். வெறும் வாணலியில் தேங்காய்த் துருவலை லேசாக வறுக்கவும். அதை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். பாதாம், முந்திரி இரண்டையும் பொடியாகச் சீவவும். வாணலியில் நெய்யைச் சூடு செய்து சீவிய பாதாம், முந்திரியை வறுத்து அடுப்பை அணைக்கவும். ஒரு பாத்திரத்தில் பொடித்த ஜவ்வரிசி, மிக்ஸியில் சுற்றிய தேங்காய்த் துருவல், பொடித்த சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து, வறுத்த பாதாம், முந்திரியை நெய்யுடன் சேர்த்து அனைத்தையும் நன்றாகக் கலந்து லட்டுகளாகப் பிடிக்கவும். சிறப்பு:   ஜவ்வரிசி லட்டை பகவானுக்குப் படைத்த பின் புசிக்கவும். விரதத்தின்போது சிலர் ஜவ்வரிசியில் தயார் செய்த உணவுகளை மட்டும் உண்பர்.

மூளை நல்லா வேலை செய்யணுமா? ஓட்ஸ் சாப்பிடுங்கள்!

ஓட்ஸ்யில் குறைந்த அளவு கொழுப்பு மற்றும் உப்பு உள்ளது. இதில் இயற்கை இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளதால் இதயம், எலும்பு மற்றும் நகங்களுக்கு மிகவும் நல்லது. இதில் கரையக்கூடிய நார்பொருள் உள்ளது. இந்த நார்பொருள் இரத்தத்தில் உள்ள எல்.டி.எல் கொலஸ்டிரால் எனப்படும் உடலுக்கு கேடு விளைவிக்கும் கொழுப்பை குறைக்க உதவுகிறது. ஓட்ஸ் உடலில் உள்ள உபரி கொழுப்பை உறிஞ்சி வெளியேற்றுகிறது. மேலும் இதில் உள்ள கரையக்கூடிய நார்பொருள், வயிறு, குடல் ஆகியவற்றின் செயல்பாடுகளை ஒழுங்கு செய்வதால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. இதனால் உடலின் வெப்பநிலை சீராக இருப்பதால் முகத்தில் பருக்கள் வருவதை தடுக்கிறது. ஓட்ஸ் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினை நிலைப்படுத்துகிறது. நரம்பு சம்மந்தமான கோளாறுகள் குறைய உதவுகிறது. பெண்களில் மாதவிடாய் நிற்கும் காலங்களில் ஏற்படும் கருப்பை மற்றும் கருவகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க உதவுகிறது. மேலும் உடல் திசுக்களில் ஏற்படும் சிதைவினை தாமதிக்கிறது மற்றும் புற்றுநோயால் ஏற்படும் அபாயத்தினை குறைக்கிறது. தினமும் காலை உணவாக ஓட்ஸ் சாப்பிட்டு வந்தால் நோய்கள் வருவதை தவிர...

காய்கறி பழ சாலட் செய்வது எப்படி? விருத நாட்கள் ஸ்பெஷல்!!!

Image
காய்கறி பழ சாலட் தேவை:  துருவிய கேரட் - அரை கப், ஊறவைத்த பச்சை வேர்க்கடலை - கால் கப், உதிர்த்த மாதுளை முத்துகள் - 5 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய பேரீச்சை - 3 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன். செய்முறை:  கொடுக்கப் பட்டுள்ள பொருள்கள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கலக்கவும். காய்கறி, பழ சாலட் தயார். சிறப்பு:  இதைச் சாப்பிட்டு விட்டு சிலர் விரதம் இருப்பர்.

ஏ.டி.எம்.-ல் கள்ள நோட்டு: வங்கிதான் பொறுப்பா? நாம் என்ன செய்ய வேண்டும்..?

Image
ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும்போது அதில் ஒன்றிரண்டு கள்ள நோட்டு வந்துவிட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் பலரும் கிழித்துப் போட்டுவிட்டு, சும்மா இருந்து விடுகிறார்கள். இதனால் நஷ்டம் நமக்குத்தான். அப்படி இல்லாமல் ஏ.டி.எம்.-ல் கள்ள நோட்டு வந்தால் நாம் என்ன செய்யவேண்டும்? யாரை அணுகவேண்டும்? இந்தக் கள்ள நோட்டுக்கு வங்கி பொறுப்பேற்குமா  வங்கியின் விதிமுறைகள் என்ன ?   ஏ.டி.எம். ஃபிட் கரன்சி! ஏ.டிஏம். வாயிலாக கள்ள நோட்டுகள் வருவதற்கு வாய்ப்பு குறைவு. ஏ.டி.எம்.-ல் ரூபாய்த் தாள்களை லோடு செய்வதற்கு முன் அவை ஏ.டி.எம். ஃபிட் கரன்சிகளாக (ATM fit currency) மாற்றப்படுகின்றன. இந்த செயல்பாட்டின்போதே கள்ள நோட்டுகள் பெரும்பாலும் தவிர்க்கப் பட்டுவிடும். ஆர்.பி.ஐ. சொல்லும் இந்த விதிமுறை அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும் என்பதால், எல்லா வங்கிகளும் இந்த விதிமுறையைக் கட்டாயம் பின்பற்றியாக வேண்டும். அனைத்து வங்கி ஊழியர்களும் கள்ள நோட்டுகள் தொடர்பான அனைத்து நுணுக்கங் களையும் தெரிந்துவைத்திருப்பது அவசியம். ஏனெனில், எந்த ரூபாயாக இருந்தாலும் அது ஒருமுறையாவது வங்கிகளுக்குள் வராமல் இருக்காது. கள்ள ந...

வாய் துர்நாற்றத்தை போக்க 10 வழிகள்!

Image
வாய் துர்நாற்றமா? வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுகிறீர்களா? பிறர் நீங்கள் பேசும்போது முகம் சுளிக்கறார்கள்? இனி கவலையே வேண்டாம். வாய் துர்நாற்றத்தைப் போக்க வைத்தியங்கள் உண்டு. இயற்கை முறையில் வாய்துர்நாற்ற…த்தை விரட்டி அடித்துவிடலாம். ஒரு சிலர் இருக்கிறார்கள் வாய் திறந்தால் பக்கத்தில் இருக்கவே முடியாதபடி வாய் நாறும். ஆனால் சாதாரணமாக உரையாடுவார்கள். காரணம் அந்த துர்நாற்றமானது அவர்களுக்குத் தெரிவதில்லை.. எதிரில் இருப்பவர்களுக்குத்தான் அந்த துர்நாற்றம் வீசும். வாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது? வயிற்றுக் கோளாறு உள்ளவர்கள் நிச்சயம் இந்த வாய் துர்நாற்றம் ஏற்படும். அதாவது அல்சர்(ulcer) நோய் உள்ளவர்கள் வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுவார்கள். இது வாய்துர்நாற்றம் ஏற்பட முக்கிய காரணங்கள். மற்ற காரணங்கள்: புகையிலை, வெற்றிலை, பாக்கு போடுதல், உடலில் நீர்ச்சத்து குறைபாடு. மருத்துவ ரீதியான காரணங்கள்: தொண்டையில் உள்ள டான்சில் சுரப்பியில் infection ஏற்பட்டால் வாய் துர்நாற்றம் ஏற்படும். உணவுக் குழாய், உணவு மண்டலத்தில் ஏற்படும் வியாதிகள் ஒரு வழிப்பாதையான உணவுக் குழாயில் ஒரு சிலருக்கு உணவுப் ப...

அக்கார அடிசில் செய்வது எப்படி? மார்கழி மாத ஸ்பெஷல்!!!

Image
அக்கார அடிசில் தேவை:   பச்சரிசி - ஒரு கப், துருவிய வெல்லம் - 3 கப், நெய் - கால் கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், பயத்தம்பருப்பு - 4 டேபிள்ஸ்பூன், பால் - 5 கப், முந்திரித் துண்டுகள் - 4 டேபிள்ஸ்பூன். செய்முறை:   வாணலியில் சிறிதளவு நெய்விட்டு முந்திரித் துண்டுகளை வறுத்துத் தனியே வைக்கவும். அதே வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் நெய்விட்டு பயத்தம்பருப்பை வறுக்கவும். அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றிக் கொதிக்கவிடவும். பால் கொதித்ததும் அரிசியைக் கழுவி அதில் சேர்த்து வேகவிடவும். பாலில் அரிசி பாதியளவு வெந்ததும் வறுத்த பயத்தம்பருப்பைச் சேர்க்கவும். இடையிடையே நெய்யையும் சேர்க்கவும். அரிசி, பருப்பு இரண்டும் பாலில் நன்றாக வெந்ததும் துருவிய வெல்லத்தைச் சேர்க்கவும். எல்லாமுமாகச் சேர்ந்து வந்ததும் மீதியுள்ள நெய்யையும் சேர்த்து, ஏலக்காய்த்தூள் தூவி வறுத்து வைத்துள்ள முந்திரியையும் சேர்த்து இறக்கவும். அக்கார அடிசில் தயார். குறிப்பு:  கூடாரைவல்லி அன்று மட்டும் மற்ற நாள்களில் செய்யும் அக்கார அடிசிலைவிட பால், வெல்லம், நெய் அதிகமாகச் சேர்க்க வேண்டும். மார்கழி மாதத்த...

திருவாதிரைக் களி செய்வது செய்வது எப்படி? மார்கழி மாத மார்கழி மாத ஸ்பெஷல்

Image
திருவாதிரைக் களி தேவை:  பச்சரிசி - ஒரு கப், பயத்தம்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன், துருவிய வெல்லம் - ஒன்றரை கப், துருவிய தேங்காய் - கால் கப், ஏலக்காய்தூள் - ஒரு டீஸ்பூன், நெய் - 3 டேபிள்ஸ்பூன், உடைத்த முந்திரித் துண்டுகள் - ஒரு டேபிள்ஸ்பூன். செய்முறை:  வெறும் வாணலியில் அரிசி, பருப்பு இரண்டையும் சிவக்க வறுத்து சற்று ஆறியதும் ரவை பதத்துக்கு உடைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் 3 கப் நீர்விட்டு ஒரு கொதிவந்ததும் வெல்லத் துருவல், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கொதிக்கவிடவும். 2 டேபிள்ஸ்பூன் நெய்யையும் சேர்க்கவும். உடைத்த ரவையைச் சேர்த்துக்கிளறி மூடி வைக்கவும். இடையிடையே திறந்து கிளறிவிடவும். களி வெந்ததும் ஏலக்காய்த்தூள் தூவி, ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யில் முந்திரித் துண்டுகளை வறுத்துச் சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாகக் கிளறிவிட்டு இறக்கவும். சிறப்பு:  `திருவாதிரைக்கு ஒரு வாய்க்களி’ என்பது பழமொழி. எனவே, மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை அன்று இந்தக் களியைச் செய்து ஆண்டவனுக்குப் படைத்து நாமும் உண்டு, மற்றவர்களுக்கும் கொடுத்து மகிழ்வோம்

சிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி?

Image
நம் நாட்டிலும் நிறையப் பேருக்கு சிறுநீரக வியாதிகள் இருப்பதே தெரியாமல் இருக்கின்றனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வில் இந்தியாவில் சுமார் 7 கோடிப் பேர்களுக்கு பல்வேறு விதமான சிறுநீரக வியாதிகள் ஆரம்ப கட்டம் முதல், முற்றிய நிலை வரை உள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆண்டிற்கு சுமார் 80 லட்சம் பேருக்கு புதியதாக சிறுநீரக வியாதி வருவதாகவும் 90,000 பேர் முற்றிய சிறுநீரக செயலிழப்பாக மாறி அவர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை தேவைப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது. இதில் பெரும்பாலானவர்களுக்கு, அவர்களுக்கு சிறுநீரக வியாதி இருப்பதே தெரிந்திருப்பதில்லை. சிறுநீரக வியாதிகள் ஆரம்பத்தில் பெரிய அறிகுறிகள் இல்லாமல் இருப்பதும் இதற்கு ஒரு காரணம். இவ்வாறு கவனிக்கப்படாத அல்லது தெரியாமல் விடப்பட்ட சிறுநீரக வியாதிகள் பல காலம் கழித்து முற்றிய நிலையில் தெரிய வரும் போது அதற்குண்டான சிகிச்சைக்கு ஆகும் செலவு மிக அதிகம். இந்தியா போன்ற ஏழை நாட்டில் நூற்றில் ஒருவருக்கே அது சாத்தியப்படலாம். ஆனால் சிறுநீரக வியாதிகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் அவற்றை குணப்படுத்துவதும் அல்லது கட்டுப்படுத்துவதும் மிக ...

போளி செய்வது எப்படி? மார்கழி மாதத்தின் இறுதி நாள் ஸ்பெஷல்!!!

Image
போளி தேவை:   கடலைப்பருப்பு - ஒரு கப், துருவிய வெல்லம் - ஒன்றரை கப், தேங்காய்த் துருவல் - கால் கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், நெய் - 4 டேபிள்ஸ்பூன். மேல் மாவுக்கு: மைதா மாவு - அரை கப், வெள்ளை ரவை - ஒரு டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், (விருப்பப்பட்டால்) லெமன் ஃபுட்கலர் - அரை டீஸ்பூன். செய்முறை:  மைதா மாவுடன் வெண்ணெய், ரவை சேர்த்து ஃபுட் கலரும் சேர்த்து நீர்விட்டு சப்பாத்தி மாவைவிட சற்றுத் தளர்வாகப் பிசைந்து அரை மணி நேரம் ஊறவிடவும். கடலைப்பருப்பை அளவான நீர்விட்டு வேகவிடவும். அதிகப்படியான நீர் இருந்தால் வடிகட்டவும். கடலைப்பருப்பில் துருவிய வெல்லம், தேங்காய்த் துருவல் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். மிக்ஸியில் அரைக்கவும். அரைத்த விழுது கைகளால் உருட்டும் பதம் இருந்தால் ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். பூரணம் தயார் (பூரணம் சற்றுத் தளர்வாக இருந்தால் வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்விட்டுக் கிளறவும். இறுகி வந்ததும் இறக்கவும். தேவையான அளவு எடுத்து உருண்டைகளாக உருட்டவும்). தயாரித்து வைத்துள்ள மேல் மாவில் இருந்து சிறு உருண்டை எட...

வெண்பொங்கல் செய்வது எப்படி? மார்கழி மாத ஸ்பெஷல்!!!

Image
வெண்பொங்கல் தேவை:   பச்சரிசி - 2 கப், பயத்தம்பருப்பு - அரை கப், நெய் - 5 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப. தாளிக்க: மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - 10 இதழ்கள், உடைத்த முந்திரித் துண்டுகள் - ஒரு டேபிள்ஸ்பூன்.   செய்முறை:   அரிசி, பருப்பு இரண்டையும் வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். மிளகு, சீரகம் இரண்டையும் ஒரு டீஸ்பூன் நெய்விட்டு வறுக்கவும். வறுத்த மிளகு, சீரகத்தில் பாதியை எடுத்து வைத்துக்கொண்டு, மீதியை கொரகொரப்பாக, ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். அடி கனமான பாத்திரத்தில் 5 கப் நீர்விட்டு, கொதித்ததும் வறுத்துவைத்துள்ள அரிசி பருப்புகளைக் கழுவி அதில் சேர்க்கவும். நன்றாகக் கிளறிவிடவும். பாதியளவு வெந்ததும் உப்பு சேர்த்து, மீண்டும் குழையவிடவும். 3 டேபிள்ஸ்பூன் நெய்யைப் பொங்கல் வேகும்போது இடையிடையே சேர்க்கவும். பொங்கல் நன்றாக வெந்ததும் வாணலியில் மீதியுள்ள நெய்யைவிட்டு இஞ்சி, பெருங்காயத்தூள், முந்திரி சேர்த்து வதக்கி, வறுத்த முழுமையான மற்றும் கொரகொரப்பாகப் ...