ஜவ்வரிசி லட்டு செய்வது செய்வது எப்படி? விருத நாட்கள் ஸ்பெஷல் !!!

ஜவ்வரிசி லட்டு

தேவை: 
ஜவ்வரிசி - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - அரை கப், பொடித்த சர்க்கரை - ஒரு கப், பாதாம், முந்திரி - தலா 10, நெய் - 6 டேபிள்ஸ்பூன்.

vikatan%2F2019-12%2F0bd80306-f767-43c7-a
செய்முறை: 
ஜவ்வரிசியை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை (குறைந்த தீயில் அடுப்பை வைத்து) வறுத்து ஆறியதும் மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். வெறும் வாணலியில் தேங்காய்த் துருவலை லேசாக வறுக்கவும். அதை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். பாதாம், முந்திரி இரண்டையும் பொடியாகச் சீவவும். வாணலியில் நெய்யைச் சூடு செய்து சீவிய பாதாம், முந்திரியை வறுத்து அடுப்பை அணைக்கவும். ஒரு பாத்திரத்தில் பொடித்த ஜவ்வரிசி, மிக்ஸியில் சுற்றிய தேங்காய்த் துருவல், பொடித்த சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து, வறுத்த பாதாம், முந்திரியை நெய்யுடன் சேர்த்து அனைத்தையும் நன்றாகக் கலந்து லட்டுகளாகப் பிடிக்கவும்.

சிறப்பு: 
ஜவ்வரிசி லட்டை பகவானுக்குப் படைத்த பின் புசிக்கவும். விரதத்தின்போது சிலர் ஜவ்வரிசியில் தயார் செய்த உணவுகளை மட்டும் உண்பர்.

Comments