போளி செய்வது எப்படி? மார்கழி மாதத்தின் இறுதி நாள் ஸ்பெஷல்!!!

போளி

Image result for poli images

தேவை:
 கடலைப்பருப்பு - ஒரு கப், துருவிய வெல்லம் - ஒன்றரை கப், தேங்காய்த் துருவல் - கால் கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், நெய் - 4 டேபிள்ஸ்பூன். மேல் மாவுக்கு: மைதா மாவு - அரை கப், வெள்ளை ரவை - ஒரு டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், (விருப்பப்பட்டால்) லெமன் ஃபுட்கலர் - அரை டீஸ்பூன்.

செய்முறை:
 மைதா மாவுடன் வெண்ணெய், ரவை சேர்த்து ஃபுட் கலரும் சேர்த்து நீர்விட்டு சப்பாத்தி மாவைவிட சற்றுத் தளர்வாகப் பிசைந்து அரை மணி நேரம் ஊறவிடவும். கடலைப்பருப்பை அளவான நீர்விட்டு வேகவிடவும். அதிகப்படியான நீர் இருந்தால் வடிகட்டவும். கடலைப்பருப்பில் துருவிய வெல்லம், தேங்காய்த் துருவல் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். மிக்ஸியில் அரைக்கவும். அரைத்த விழுது கைகளால் உருட்டும் பதம் இருந்தால் ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். பூரணம் தயார் (பூரணம் சற்றுத் தளர்வாக இருந்தால் வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்விட்டுக் கிளறவும். இறுகி வந்ததும் இறக்கவும். தேவையான அளவு எடுத்து உருண்டைகளாக உருட்டவும்).
தயாரித்து வைத்துள்ள மேல் மாவில் இருந்து சிறு உருண்டை எடுத்து வாழை இலையில் சிறிதளவு எண்ணெய் தடவி உருண்டையை வைத்து தட்டி, மேலே தயாரித்து வைத்துள்ள பூரண உருண்டை ஒன்றை வைத்து மூடி கவிழ்த்துப் போட்டு போளியாகத் தட்டவும். தவாவில் போளியைப் போட்டு ஓரங்களில் சிறிதளவு நெய் ஊற்றி ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபுறமும் வெந்ததும் எடுக்கவும். மொத்த மாவையும் இதேபோல் போளியாகத் தட்டி எடுக்கவும்.
சிறப்பு: 
மார்கழி மாதத்தின் இறுதி நாளான போகி அன்று இதைச் செய்து படைப்பர்.

Comments