அக்கார அடிசில் செய்வது எப்படி? மார்கழி மாத ஸ்பெஷல்!!!
அக்கார அடிசில்
தேவை:
பச்சரிசி - ஒரு கப், துருவிய வெல்லம் - 3 கப், நெய் - கால் கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், பயத்தம்பருப்பு - 4 டேபிள்ஸ்பூன், பால் - 5 கப், முந்திரித் துண்டுகள் - 4 டேபிள்ஸ்பூன்.
![vikatan%2F2019-12%2Ff3b5ad10-2d14-41d7-9](https://images.assettype.com/vikatan%2F2019-12%2Ff3b5ad10-2d14-41d7-9a6f-3a579ee7f82a%2F122.jpg?w=640&auto=format%2Ccompress)
செய்முறை:
வாணலியில் சிறிதளவு நெய்விட்டு முந்திரித் துண்டுகளை வறுத்துத் தனியே வைக்கவும். அதே வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் நெய்விட்டு பயத்தம்பருப்பை வறுக்கவும். அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றிக் கொதிக்கவிடவும். பால் கொதித்ததும் அரிசியைக் கழுவி அதில் சேர்த்து வேகவிடவும். பாலில் அரிசி பாதியளவு வெந்ததும் வறுத்த பயத்தம்பருப்பைச் சேர்க்கவும். இடையிடையே நெய்யையும் சேர்க்கவும். அரிசி, பருப்பு இரண்டும் பாலில் நன்றாக வெந்ததும் துருவிய வெல்லத்தைச் சேர்க்கவும். எல்லாமுமாகச் சேர்ந்து வந்ததும் மீதியுள்ள நெய்யையும் சேர்த்து, ஏலக்காய்த்தூள் தூவி வறுத்து வைத்துள்ள முந்திரியையும் சேர்த்து இறக்கவும். அக்கார அடிசில் தயார்.
குறிப்பு:
கூடாரைவல்லி அன்று மட்டும் மற்ற நாள்களில் செய்யும் அக்கார அடிசிலைவிட பால், வெல்லம், நெய் அதிகமாகச் சேர்க்க வேண்டும். மார்கழி மாதத்தில் வரும் கூடாரைவல்லி அன்று செய்து இதைப் படைக்க வேண்டும்.
Comments
Post a Comment