திருவாதிரைக் களி செய்வது செய்வது எப்படி? மார்கழி மாத மார்கழி மாத ஸ்பெஷல்
திருவாதிரைக் களி
தேவை:
பச்சரிசி - ஒரு கப், பயத்தம்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன், துருவிய வெல்லம் - ஒன்றரை கப், துருவிய தேங்காய் - கால் கப், ஏலக்காய்தூள் - ஒரு டீஸ்பூன், நெய் - 3 டேபிள்ஸ்பூன், உடைத்த முந்திரித் துண்டுகள் - ஒரு டேபிள்ஸ்பூன்.

![vikatan%2F2019-12%2Fb995f568-0bd9-484e-8](https://images.assettype.com/vikatan%2F2019-12%2Fb995f568-0bd9-484e-8b2a-f044136a130c%2F108.jpg?w=640&auto=format%2Ccompress)
செய்முறை:
வெறும் வாணலியில் அரிசி, பருப்பு இரண்டையும் சிவக்க வறுத்து சற்று ஆறியதும் ரவை பதத்துக்கு உடைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் 3 கப் நீர்விட்டு ஒரு கொதிவந்ததும் வெல்லத் துருவல், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கொதிக்கவிடவும். 2 டேபிள்ஸ்பூன் நெய்யையும் சேர்க்கவும். உடைத்த ரவையைச் சேர்த்துக்கிளறி மூடி வைக்கவும். இடையிடையே திறந்து கிளறிவிடவும். களி வெந்ததும் ஏலக்காய்த்தூள் தூவி, ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யில் முந்திரித் துண்டுகளை வறுத்துச் சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாகக் கிளறிவிட்டு இறக்கவும்.

சிறப்பு: `திருவாதிரைக்கு ஒரு வாய்க்களி’ என்பது பழமொழி. எனவே, மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை அன்று இந்தக் களியைச் செய்து ஆண்டவனுக்குப் படைத்து நாமும் உண்டு, மற்றவர்களுக்கும் கொடுத்து மகிழ்வோம்
Comments
Post a Comment