குதிகால் வலியை விரட்ட!!!
இன்றைய பரபரப்பான சூழலில் உடல் எடையை கட்டுக்குள் வைத்து பேணிகாப்பது என்பது சவாலான விஷயம்தான். இருப்பினும் அதற்கு தகுந்தாற்போல் உயரத்திற்கு தகுந்த அளவில் எடையை பராமரிக்க வேண்டும். இவ்வாறு பராமரிப்பதன் மூலம் மூட்டுவலி மற்றும் குதிகால் வலி ஆகியவற்றை தவிர்க்கலாம். உடலின் மொத்த எடையையும் தாங்குவது குதிகால் என்பதால் அதற்காக அதிக கவனம் அவசியம். பொதுவாகவே, குதிகால் சதை, கணுக்கால் பூட்டு, உள்ளங்கால் ஆகியவை உடலின் பாரத்தை தாங்கும் எலும்புகளும் சதைகளும் அதிகம் உள்ள இடங்களாகும். உள்ளங்கால் மற்றும் கணுக்கால் தசைகள் வலுவிழுந்தால் நடக்கவோ, நிற்கவோ முடியாது. இதையடுத்து குதிகால் மற்றும் இடுப்பு வலி அதிகரிக்கும். முதலில் வலி அதிகரிக்கும்போது எலும்புகளில் ஏதேனும் பிரச்னை உள்ளதா என்பதை கண்டறிய மருத்துவரை அணுகி எக்ஸ்ரே மூலம் கண்டறியலாம். குதிகால் வலி வராமல் தடுக்க இயற்கையான முறையில் பல வைத்தியங்கள் உள்ளன. காலை முதல் இரவு வரை ஓயாமல் நடப்பவர்களுக்கும், வீட்டு வேலைகளை செய்வோருக்கும் இரவில் குதிகால் வலி ஏற்படுவது சகஜமாகிவிட்டது. இதனை தடுக்க இரவில் படுக்கும் முன்பும், காலையில் குளிப்பதற்கு முன்பும் உள்ளங்...