பிஸ்கட் நன்மையா? தீமையா?
பிஸ்கட் உண்பது நல்லதா? அல்லது உடலுக்கு தீங்கு விளைவிக்கிறதா? என்ற தலைப்பில் சி.ஏ.ஐ என்ற என்.ஜி.ஒ அமைப்பு கருத்தரங்கம் நடத்தியது.
![Jam-thumbprint-biscuits-007.jpg](https://static.guim.co.uk/sys-images/Guardian/Pix/pictures/2011/1/13/1294937512010/Jam-thumbprint-biscuits-007.jpg)
பழம், பிஸ்கட், வடை, சமோசா, சாலட், முறுக்கு போன்ற கொறிக்கும் தீனிகளை ஓய்வு நேரங்களிலோ, உணவுக்கு மாற்றாக சில நேரங்களிலோ எடுத்து கொள்கின்றனர். தொலைக்காட்சி மற்றும் செய்திதாள்களில் இவைகளின் தரம் பற்றி விவாதித்தாலும் இவை உடலுக்கு எந்த வகையில் உகந்தது என்ற விவாதம் இன்னும் உலகெங்கும் நடைபெற்று தான் வருகிறது. இவைகளுள் தேநீர் மற்றும் பயணத்தின்போது துணை உணவாக பயன்படும் பிஸ்கட் வகைகளைப் பற்றிய ஒரு ஒப்பீட்டு ஆய்வு என்ன சொல்கிறதென்று பார்ப்போம்.
கோதுமை மாவு, மைதா மாவு, சர்க்கரை, வனஸ்பதி, உணவு எண்ணெய் போன்ற முக்கிய பொருட்களை கொண்டு பிஸ்கட்டுகள் தயாரிக்கப்பட்டாலும் பல்வேறு வகைப்பட்ட பிஸ்கட்டுகளை பொறுத்து பிற பொருட்கள் இதனுடன் சேர்க்கப்படுகிறது. உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு விதிகளின்படி, பிஸ்கட்டுகள் அந்தந்த தரத்தில் உள்ளதா?எனவும் பாக்கெட் செய்யப்படும் விதம் மறறும் லேபிள் விவரத்தையும் அறிய ஒப்பீட்டு சோதனைகள் செய்யப்பட்டது. அவற்றின் கொழுப்பு, புரோட்டீன், சர்க்கரை, அமில அளவு போன்றவைகள் எந்த அளவில் இருக்க வேண்டும் என்றும் ஆராயப்பட்டது.
நுகர்வோர் நலனையே கருத்தில் கொண்டு உணவுப் பாதுகாப்பு, குடிநீர் பாதுகாப்பு, நுகர்வோர் நலன் என பல்வேறு சேவைகளை செய்துவரும் கான்சர்ட் நிறுவனம் உணவுப் பொருள் உட்பட பல்வேறு வகையான நுகர் பொருள் மற்றும் சேவைகளை ஆய்வுசெய்து வருகிறது. இந்த ஆய்வுக்காக மொத்தம் 34 பிஸ்கட்டுகள் 4 தென்மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்திலிருந்து ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
பிஸ்கட்டுகளின் மொத்த கொழுப்பு, நிறைவற்ற கொழுப்பு, சர்க்கரை, உப்பு, கொலஸ்டிரால் ஆகியவற்றின் தன்மைகளை கொண்டு அவற்றின் தரம் சோதிக்கப்பட்டது. பிஸ்கெட்டுகளில் உள்ள சில பொருட்கள் ஊட்டச்சத்துகளாக பயன்பட்டாலும் கொலஸ்டிரால், டிரான்ஸ்பேட், போன்றவை இதய நோய், ஸ்ட்ரோக், உயர் இரத்த அழுத்தம் போன்ற வியாதிகளுடன் சம்மந்தபட்டிருப்பதால் எல்லா பிஸ்கெட்டுகளும் உடலுக்கு உகந்ததல்ல என்கின்றனர். பிஸ்கட்டுகளில் ஈரப்பதம் அதிகமானால் சீக்கிரம் கெட்டுப்போகும். சுவைகுன்றும். அமிலத்தன்மை அதிகமாகும் பட்சத்தில் வாந்தி, வயிற்றுப்போக்கு தாக்கும். செயற்கை வண்ணம் புற்றுநோயை உருவாக்கும். அதனால் பிஸ்கட் கவர்களில் உள்ள விவரச்சீட்டில் என்னென்ன பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன என எழுதப்பட்டிருப்பதை பார்த்து வாங்க சொல்கின்றனர்.
பிஸ்கட் சாப்பிடும் முன் நினைவில் கொள்ள வேண்டியவை
* பழங்கள், காய்கறிகள் மட்டுமே உடலுக்கு தேவையான வைட்டமின், தாதுக்கள் நார்ச்சத்துகளைத் தரும்.
* பேக்கரியில் விற்கப்படும் பிஸ்கட்டுகள் குறைந்த நாட்களே பயன்படும். ஆனால் அவைகள் குறைந்த ரசாயனங்கள் இருப்பதால் உடலுக்கு கேடு விளைவிக்காது.
* 2 மேரி பிஸ்கெட்டுகளை உட்கொண்டால் 56 கி.கலோரிகள் நமது உடலுக்கு கிடைக்கும். 56 கி.கலோரிகளை செலவு செய்ய குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி அவசியம்.
* கடும் உடற்பயிற்சிக்கு பின் உண்ண உகந்தது பிஸ்கட் எனலாம்.
* சாப்பிடும் முன் பிஸ்கட்டில் கலந்துள்ள வெண்ணை சர்க்கரையின் அளவை நினைவில் கொள்ளவும்.
* கடைகளில் விற்கப்படும் எல்லா பிஸ்கட்களும் உடல் நலத்திற்கு நல்லதல்ல.

Comments
Post a Comment