குழந்தைகளுக்கும் நீரிழிவு வரலாம்!
முதியோரின் பிரச்னைகளில் ஒன்றாக இருந்த நீரிழிவு இன்று சிறு குழந்தைகளைக் கூட விட்டு வைப்பதில்லை. குழந்தைகளை மட்டுமே பாதித்த நீரிழிவை ‘ஜுவைனல் டயப்பட்டீஸ்’ என்று சொன்ன காலம் மாறி, இன்று மருத்துவத்தில் அந்த வார்த்தையையே உபயோகிப்பதில்லை என்கிற நிலை. அதே மாதிரி டைப் 2 நீரிழிவு பெரும்பாலும் பெரியவர்களை மட்டுமே பாதித்துக் கொண்டிருந்த காலம் மாறி, இன்று அதுவும் குழந்தைகளிடம் கருணை காட்டுவதில்லை.
![Image result for sugar patient"](https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn%3AANd9GcStjdEehTi4ly_IYyoQVg6TepEO--RZM_Pi4Pp4d4oMEEkFtwUa)
நீரிழிவை சமாளிப்பது என்பது பெரியவர்களுக்கே சவாலானது என்கிற போது, குழந்தைகள் பாதிக்கப்பட்டால்?
‘‘டைப் 1 நீரிழிவுக்கு இதுவரை சரியான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த வகை நீரிழிவுக்கு குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களும் இன்று பாதிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு இன்சுலின் சுரப்பே இருக்காது. இன்சுலினை சுரக்கும் செல்கள், ஏதோ காரணத்தால் இவர்களுக்குஇல்லாமலிருக்கும். இன்ஃபெக்ஷன் காரணமாகவோ, உடலுக்குள்ளேயே உள்ள எதிர் உயிரிகள் அந்த செல்களை பாதிப்பதாலோகூட இப்படி இருக்கலாம். இன்சுலின் சுரப்பே இல்லாததால், இவர்களுக்கு உடலில் ஒருவித அமிலச் சுரப்பின் அளவும் எகிறும்.
பிறந்த 6 மாதக் குழந்தைகூட இவ்வகை நீரிழிவுக்கு ஆளாவதைப் பார்க்கிறோம். இந்த வகை நீரிழிவுக்கு இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வது ஒன்றுதான் தீர்வு. இன்சுலின் போடாவிட்டால் அமிலச் சுரப்பு அதிகமாகி, வாந்தி, உடலிலுள்ள தண்ணீர் வற்றிப் போவது போன்றவை உண்டாகி, கோமா நிலைக்குக்கூடப் போகலாம். இவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு தாறுமாறாக எகிறும், குறையும். தினசரி 3 முதல் 4 வேளைகள் இன்சுலின் போட வேண்டியதிருக்கும். பிறந்த குழந்தையானாலும் இதுதான் தீர்வு.
ஒரே ஒரு ஆறுதல்...
முன்பெல்லாம் குட்டிப் பாப்பாக்களுக்கு இன்சுலின் ஊசி போட்டால், 20 நிமிடங்கள் கழித்துதான் அது வேலை செய்யும். ஆனால், இப்போது வந்திருக்கிற அல்ட்ரா ஷார்ட் ஆக்டிங் ஊசியானது, போட்ட உடனேயே வேலை செய்யும். அதே மாதிரி இன்சுலின் பம்ப்பும் ஒரு வரப்பிரசாதம். ஊசியாகக் குத்துவதற்குப் பதில், இந்த இன்சுலின் பம்ப்பை சருமத்தின் அடியில் ஒட்டிக் கொள்ளலாம். அதிலுள்ள பிளாஸ்டிக் டியூப் வழியே மருந்தானது உடலுக்குள் சென்றுவிடும். நான்கைந்து நாட்களுக்கொரு முறை போட்டால் போதும்.
இது ஒரு பக்கமிருக்க டைப் 2 நீரிழிவும், இன்று 10, 12 வயதிலேயே பிள்ளைகளைப் பாதிக்க ஆரம்பித்திருக்கிறது. இந்த வகையில் இன்சுலின் சுரப்பு இருக்கும். ஆனாலும் சரியாக வேலை செய்யாது. வந்துவிட்ட பிறகு மருந்து, மாத்திரைகள் அவசியம். அதிலும் கட்டுப்பாடு இல்லாதவர்களுக்கு இன்சுலின் ஊசி தேவைப்படலாம்.
பரம்பரைக் காரணம் ஒரு சின்ன அளவு என்றாலும், வாழ்க்கை முறை, ஆரோக்கியமான உணவு, எடைக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்றவற்றின் மூலம் இந்த வகை நீரிழிவில் இருந்து விலகி இருக்க முடியும். எப்படியிருப்பினும் குழந்தைகளை சிறு வயது முதலே ஆரோக்கியமான உணவுப் பழக்கத்துக்கும், உடற்பயிற்சிக்கும் பழக்க வேண்டியது பெற்றோரின் முதன்மையான பொறுப்பாக இருக்கட்டும்.’’

Comments
Post a Comment