கோடையினை சமாளிக்க
கோடை வெயிலின் எதிரொலியாக, குளிர்பான கடைகளில் விற்பனை சூடுபிடித்துள்ளது. ஆரம்பமே அசதியை தருவதாகத் தான் இருக்கிறது. பச்சிளம் குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை, அனைத்து வயதினரையும் வாட்டி வதைக்கும் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க சில வழிகள்.
கோடை வெப்பத்தின் தாக்கத்தால், நம் உடம்பில் உள்ள நீர்ச் சத்தின் அளவு, அளவிற்கு அதிகமாக வெளியேறும் வியர்வை, ஆவியாதல் ஆகியவற்றால் குறையும். இதனால், உடல் சோர்வு, மயக்கம் ஏற்படும். உடல் உறுப்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து, முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படும் அபாயமும் உண்டு.
இதனை தடுக்க, ஆறு மாதத்திற்கு உட்பட்ட தங்கள் பச்சிளம் குழந்தைகளுக்கு, தாய்ப்பால் தரும் இளம் தாய்மார்கள் உள்ளிட்டோர், தினமும், 3 லிட்டர் முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது அவசியம். ஆறு மாதத்திற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு உணவு ஊட்டும்போது, உணவு மட்டுமின்றி, அவ்வப்போது தண்ணீர் கொடுக்க வேண்டும்.
டைபாய்டு, மஞ்சள் காமாலை, காலரா, வாந்தி பேதி ஆகிய நோய்கள் வராமல் தடுக்க, கோடை காலம் என்றாலும், தண்ணீரை நன்றாக காய்ச்சி, ஆற வைத்து பருக வேண்டும். குளிர்பான கடைகளில், பயன்படுத்தப்படும் தண்ணீரின் தூய்மையை பொறுத்தே, வெளியிடங்களில், ஜூஸ், குளிர்பானங்களை குடிக்க வேண்டும். குளிர்பானங்களை முடிந்தவரை, வீட்டிலேயே தயார் செய்ய வேண்டும்.
உடம்பின் நீர்ச் சத்தை பராமரிக்க பயன்படும், தர்பூசணி பழம், வெள்ளரிக்காய் ஆகியவற்றை, கடைகளில் வாங்கும்போது, அவற்றில், ஈ மொய்க்காமல், சுகாதாரமாக விற்கப்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டும். நீர்சத்து நிறைந்த, இளநீர், நுங்கு ஆகியவற்றை தொடர்ந்து உட்கொள்வதால், கொப்புளங்கள், வேர்க்குரு போன்ற சரும நோய்கள், சின்னம்மை ஆகியவற்றுக்கு இலக்காகாமல் இருக்கலாம். நாகரிகம் என்ற பெயரில், ஜீன்ஸ், "டீ-ஷர்ட்' போன்ற இறுக்கமான ஆடைகளை அணியாமல், வியர்வை உறிஞ்சும் தன்மைக் கொண்ட, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.

Comments
Post a Comment