Posts

Showing posts from January, 2020

உமிழ்நீர் - பயன் என்ன!!!

Image
எச்சில் என்பது வாயில் ஊறும் உமிழ்நீர். அது உணவை செரிப்பதற்கும், வாயின் உள் பகுதியையும், தொண்டைக் குழியையும் ஈரப்பதமாக வைத்திருப்பதற்கும் உதவுகிறது. உடல் என்னும் வீட்டில் இருக்கும் ஒன்பது வாசல்களில் வாயும் ஒன்று. இது உணவை உண்பதற்கும், பேசுவதற்கும் பயன்படுகிறது. உமிழ்நீரை வெளியில் துப்புதல் ஆகாது என சித்தர்கள் முதல் தற்கால மருத்துவர்கள் வரை கூறுகின்றனர் புளிப்பு, இனிப்பு இவற்றின் சுவையை உணர்ந்தால் வாயில் உமிழ்நீர் தானாக ஊறும். அதுபோல் உடலுக்கு ஒவ்வாமை ஏற்படுத்துகின்ற உணவுகளை சாப்பிட்டாலும் உமிழ்நீர் அதிகம் சுரக்கும். உடலில் உமிழ்நீர் சுரப்பிகள் மூன்று ஜோடிகள் உள்ளன. 1. பரோடிட் சுரப்பி 2. சப்மாண்டிபுலர் சுரப்பி 3. சப்லிங்குவல் சுரப்பி பரோடிட் சுரப்பி இது காதுகளுக்குக் கீழே அமைந்துள்ளது. இதன் நாளங்கள் வழியாக கன்னங்களின் உட்புறம் இரண்டு மேல் கடவாய் பற்களுக்கு மேல் இந்த சுரப்பு நாளங்களின் துவாரங்கள் உள்ளன. இந்த நாளங்களுக்கு ஸ்டென்சன்ஸ் நாளங்கள் என்று பெயர். இது மனித உடலில் நீர் வறட்சி ஏற்படும்போதெல்லாம் அதிகம் சுரந்து வறட்சியைக் குறைக்கிறது. ...

ஜீரண பிரச்சினைகளுக்கு சிறந்த 10 வீட்டு வைத்தியங்கள் !!

அனைவரும் வாழ்க்கையில் ஏதோ ஒரு சமயத்தில் கண்டிப்பாக அசிடிட்டி பிரச்சினை யால் அவதியுற் றிருப்போம் என்பது 100% உண்மை. வயிற்றில் அமிலம் சுரக்கும் செயல்பாட்டிற்கும், அதிகளவில் அமிலம் சுரப்பதை தடுக்கும் செயல்பாட்டிற்கும் இடையேயான ஏற்றத்தாழ்வால் ஏற்படும் அறிகுறிகள் தான் அசிடிட்டி ஆகும். நாம் உண் ணும் உணவு செரி மானம் அடைவ தற்கு வயிற்றில் அமிலம் சுரக்கிறது. வயிற்றில் இரைப்பை சுரப்பிகள் மூலம் அளவுக்கதிகமாக அமிலம் சுரக்கும் போது, இது வயிற் றில் அமிலத்தன்மையை ஏற்படுத்துகிறது. மோசமான உணவுப்பழக்கம், மனஅழுத்தம், பதற்றம் ஆகியவை அசிடிட்டிக்கான முக்கிய காரணங்களாகும். குடும்ப விருந்தின்போது கொஞ்சம் அதிகமாக குலாப் ஜாமுன் சாப்பிட்ட காரணத்தாலோ அல்லது டீ பிரேக்கில் காரமான சமோசா சாப்பிட்ட காரணத்தாலோ நமக்கு அசிடிட்டி ஏற்பட்டிருக்கலாம். காரணம் என்னவாக இருந் தாலும், அசிடிட்டி ஒரு சங்கடமான அனுபவமாகும். இந்த சந்தர்ப்பங்களில் நாம் சாதாரணமாக ஆன்டாஸிட் எடுத்துக் கொள்வது வழக்கம். ஆனால் இதைத் தடுக்க வேறு இயற்கை முறைகள் உண்டு என்பது பலருக்கு தெரிவதில்லை. ஆகவே இதிலிருந்து மீள்வதற்கான 10 இயற்கை வைத்திய முறைகளை இங்க...

ஃபுட் பாய்சன் - புரிதல்!!!

Image
புரதம் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் கெட்டுப்போகும் தன்மை கொண்டவை. வேர்க்கடலை, பால், அசைவ உணவு வகைகள், எண்ணெய் எல்லாம் சீக்கிரமே கெட்டுப் போகும். எண்ணெயில் பொரித்த உணவுகளை சேர்த்து வைத்து சாப்பிட்டால் ஆபத்தும் சேர்ந்து வரும். மழை, பனிக்காலத்தில் உணவுகள் கெட்டுப் போகக் காரணமாக இருப்பவை பூஞ்சைகள். அரிசி, பருப்பு போன்ற கிச்சனுக்குள் இருக்கும் பொருட்களுக்குள் வந்து உட்கார்ந்து கொள்ளும் இந்தப் பூஞ்சைகள் பொருளையும் கெடுத்து, நோய்களையும் கொடுத்துவிட்டுப் போகும். மளிகைப் பொருட்களில் ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. ஃப்ரிட்ஜுக்குள்தானே இருக்கிறது என்கிற நினைப்பு வேண்டாம். ஃப்ரிட்ஜில் ஒரு பொருளில் இருக்கும் பூஞ்சை மற்ற உணவுப் பொருட்களுக்கும் பரவிவிடும். கிச்சன் பொருள்களில் பூச்சிகள், பூஞ்சைகள் இருப்பது தெரிந்தால் அதை வெயிலில் உலர்த்தி மறுபடியும் பயன்படுத்துவார்கள். வெயிலில் காய வைப்பதால் பூஞ்சைகள் மறைந்துவிடாது. அவற்றை உடனடியாக கொட்டிவிடுவது நல்லது. எக்ஸ்பயரி ஆன பொருள்களைப் பயன்படுத்தினாலும் ஃபுட் பாய்சன் ஏற்படும். சிப்ஸ் வகைகளை வாங்கும்போது கவனமாக இருங்கள். எண்ணெயில் இருந்த...

கிட்னியில் கற்கள் உருவாவதற்கான காரணங்கள்!!!

Image
7000 ஆண்டுகள் பழமையான எகிப்து மம்மிகளின் கிட்னிகளில், கல் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அப்படியானால், கிட்னிக்குள் கல் உருவாகும் தன்மை, மனித இனத்தின் தொடக்கம் முதலே இருந்து வந்துள்ளது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. தற்போது ஆண்டுக்கு சுமார் 30 லட்சம் பேர் இந்த நோயினால் பாதிக்கப்படுவதாகவும், இவர்களில் 5 லட்சம் பேர் வரும்போதே அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நிலையில் வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தற்போதைய அனைத்து மருத்துவ முறைகளிலும், சிறுநீரகத்தில் கல் உருவாவதை தடுப்பதற்கும், உருவான பின்னர் கரைப்பதற்கும் எளிய சிகிச்சை முறைகள் வந்துவிட்டன. இந்த நோய் எந்த அளவிற்கு பரவலான நோயாக மாறி இருக்கிறதோ அந்த அளவிற்கு எளிதில் குணப் படுத்தக்கூடிய நோயாகவும் உள்ளது. கிட்னி கல் என்றால் என்ன? சிறுநீரில் பல வேதிப் பொருட்கள் கலந்துள்ளன. அவற்றுள் சில மணிச்சத்துக்கள், சில உயிரியற் பொருட்கள். இவை இரண்டும் தகுந்த விகிதத்தில் இருப்பதால்தான் அவை படிகங்களாகவோ, (crystals) திடப்பொருள்களாகவோ, சிறுநீர்த் தாரைகளில் படியாமல் இருக்கின்றன. சிலருக்கு ஏற்படும் வளர்சிதை மாற்றங்கள் இவற்றின...

சர்க்கரை நோய் எப்படி வருகிறது?

Image
சர்க்கரை நோயைக் கண்டுபிடித்தவுடன் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் . . .   * சர்க்கரை நோய் நிலை, சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டதா? அல்லது நீண்ட நாட்கள் கண்டுப்பிடிக்கப்படாமல் இருந்திருந்ததா? * சர்க்கரை நோய் உடலில் இருப்பது சில, பல வருடங்களா? * சில ஆண்டுகளாக இருக்கிறது என்றால் அதன் விளைவுகளை அறிய வேண்டும். * பல ஆண்டுகளாக இருந்தால் இதனால் பலவிதமான கோளாறுகளை கண்டறிதல் வேண்டும். முதல் மூன்று வகைகளில் அவ்வளவு பாதிப்பு தெரியாது. கடைசி நான்காவது வகையில் பல உறுப்புகளின் தாக்கம், செயலிழப்புகளைப் பார்க்க முடியும். சர்க்கரை நோய் எப்படி வருகிறது?  நாம் உண்ணும் உணவு, உணவுக் குழாய் மூலம் இரைப்பையை அடைந்தவுடன் செரித்து இரைப்பையிலிருந்து சிறுகுடலுக்கு செல்கிறது. அந்நேரத்தில் இரைப்பை, சிறு குடலிலிருந்து இன்கிரிடின் என்ற குளுகோசை கட்டுப்படுத்தும் சுரப்பிகள் பீட்டர் செல்களை தூண்டி இன்சுலின் சுரக்கப்பட்டு குளோஸ் என்ற சர்க்கரையை உடலுக்கு ஏற்ற சக்தியாக மாற்றி உடலுக்கு புத்துணர்வு கொடுக்கிறது. சர்க்கரை நோய் . . .நாம் சாப்பிடும் அதிக சர்க்கரையினால் மட்டுமல்லாது ஆல்பாசெல், பீட்டாச...

தேசிய கீதத்தின் பொருள்!!!

ஜன கன மன அதிநாயக ஜய ஹே  -  மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்பவள் நீ தான். வெற்றி உனக்கே  ! பாரத பாக்ய விதாதா  –  இந்தியத் திருநாட்டுக்கு பெருமையும், மங்கலமும், செல்வங்களும் அருளுபவள் நீயே. பஞ்சாப சிந்து குஜராத் மராத்தா திராவிட உத்கல பங்கா ஐந்து பெரிய நதிகள் ஓடும் நிலம், பெரும் வீரர்கள் தோன்றிய இடம், சமய ஒற்றுமையை வலியுறுத்தும் சீக்கியத்தின் பிறப்பிடம் – பஞ்சாப் மாகாணம் உன்னுடையது. புராதன பாரதத்தின் தலை வாசல், நான்கு வேதங்களின் பிறப்பிடம் , பழம்பெரும் சிந்து சமவெளிக் கலாச்சாரம் தழைத்தோங்கிய இடம் – சிந்து நதிப்பிரதேசம் உன்னுடையது. குஜராத் மாநிலம் உன்னுடையது . வீர மராட்டிய மாநிலம் உன்னுடையது . பழம்பெரும் திராவிடக் கலாச்சாரத்தின் தொட்டில், செம்மொழியாம் தமிழ்மொழியின் பிறப்பிடம், இந்தியக் கலாச்சாரத்தின் மிக முக்கிய பாகங்களை அளித்த பெருநிலம் – திராவிட பீடபூமி உன்னுடையது. பூரி ஜெகன்னாதம், கொனாரக் போன்ற சிறந்த கலைச்செல்வங்களாகிய கோவில்கள் இருக்கும் இடம், பழங்காலத்து கலிங்க தேசம் – உத்கலமாகிய ஒரிஸ்ஸா மாநிலம் உன்னுடையது. பழம்பெருமை மிக்க வங்காள (பங்கா) தேசம் உன...

தீக்காயங்களுக்கான முதலுதவி முறைகள்..!!!

Image
பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏற்பட்டால், காயம் ஏற்பட்ட இடத்தில் எரிச்சல் அடங்கும் வரை சுத்தமான தண்ணீரை ஊற்ற வேண்டும். ஐஸ் வாட்டரை பயன்படுத்தக் கூடாது. பிளாஸ்திரி, பேன்டேஜ் போடுவதை தவிர்க்க வேண்டும். * நீங்கள் அறிந்து எங்காவது தீப்பற்றிக் கொண்டால் உடனே தீயணைப்புத் துறைக்கு (போன் எண் 101) தகவல் தெரிவியுங்கள். * எண்ணை மற்றும் அமிலத்தால் ஏற்பட்ட தீ விபத்துகளுக்கு மணலை உபயோகித்து நெருப்பை அணைக்க முயலுங்கள். மற்ற தீவிபத்துகளை நீரூற்றி அணைக்க முயற்சி செய்யுங்கள். * விபத்தின்போது தீப்பிடித்து எரியும் நபரின் அருகில் நீங்கள் இருந்தால் உடனே அவரை கீழே தள்ளி கம்பளம் - போர்வை, கோணி இதில் ஏதாவது ஒன்றினால் அவரை இறுகச் சுற்றினால் தீ பரவாமல் அணைந்து விடும். * ஆடையில் தீப்பற்றி விட்டால் பயந்து ஓடக்கூடாது. ஓடினால் காற்றின் வேகத்தில் தீ மேலும் வேகமாக பற்றி எரியும். அதனால் தீப்பற்றியவர் கீழே படுத்துக் கொள்ள வேண்டும். * சூடான பாத்திரங்களை தொடுவதனாலோ, கொதிக்கும் சூடான எண்ணெய் தெறித்து விழுவதினாலோ, சூடான பொருள் உடலின் மீது விழுவதனாலோ ஏற்படும் சிறு புண்கள், கொப்புளங்களை கையினால் தேய்ப்பதோ, நகத...

ஆன்டிபயாட்டிக்(antibiotic) எடுக்கும் போது சாப்பிடக் கூடாத உணவுகள்!!!

Image
தற்போது ஆரோக்கியமற்ற உணவு மற்றும் வாழ்க்கையினால், உடல் நிலை சரியில்லாமல் நிறைய பேர் தினமும் மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்கின்றனர். சொல்லப்போனால் அது ஒரு அழையா விருந்தாளியைப் போல், அனைவரிடமும் வந்துவிடுகிறது. அவ்வாறு உடல் நிலையை தேற்றுவதற்காக மருந்து மாத்திரைகளை எடுக்கும் போது, அந்த மருந்து உடலில் நன்கு வேலை செய்ய வேண்டுமென்றால், ஒரு சில உணவுகளை சாப்பிடக் கூடாது. ஏனென்றால் அவ்வாறு சாப்பிட்டால், உடலில் அந்த மருந்துகள் சரியாக வேலை செய்யாமல் போய்விடும். இப்போது அத்தகைய உணவுகள் என்னவென்று படித்து தெரிந்து கொள்ளங்களேன்… ஆல்கஹால்-  மருந்து மாத்திரைகளுக்கு ஆல்கஹால் முற்றிலும் ஒரு எதிரி. ஏனெனில் அந்த ஆல்கஹால், மாத்திரைகளில் உள்ள மருந்துகளின் தன்மையை குறைத்துவிடுகின்றன. மேலும் இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள நோய்கள் விரைவில் குணமாவது தடைப்பட்டு, நீண்ட நாட்கள் அந்த நோயை உடலில் வைத்துக் கொள்ள நேரிடும். ஆகவே விரைவில் உடல் நோய் சரியாக வேண்டுமென்றால், இந்த ஆல்கஹால் குடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பால் பொருட்கள்- பால் பொருட்களான பால், தயிர், சீஸ் போன்றவைகளும், மருந்துகளின...

சச்சினின் சக்சஸ் ரகசியங்கள்!!!

Image
ஆர்வம்கொள்: இளம் வயது சச்சினின் கிரிக்கெட் குருநாதர் ரமாகாந்த் அச்ரேகர். அவரிடம் பயிற்சி எடுத்தபோது, மைதானத்துக்கு முதல் ஆளாக வரும் சச்சின், வீடு திரும்புவதில் கடைசி ஆளாக இருப்பார். பயிற்சி தவறேல்:  போட்டிகள் இருக்கிறதோ இல்லையோ, அன்றாடம் பேட் பிடித்து பயிற்சி செய்யத் தவறியதே இல்லை. 'நாமதான் கில்லியாச்சே’ என்று ஒரு நாளும் நினைத்தது இல்லை. வியூகம் வகுத்திடு:  புதுவிதமானத் தடைகள் வந்தால், அதற்கு ஏற்றபடி வியூகம் வகுத்து ஜெயிப்பார். எந்த பௌலர் தன்னை அடிக்கடி அவுட் ஆக்குகிறாரோ, அவரது பந்துகளை எதிர்கொள்ள சிறப்புப் பயிற்சி எடுப்பார். ஒழுக்கம் போற்று: இளம் வயதில் உலகப் புகழும், கோடிக் கணக்கான பணம் கிடைத்தபோதும் சுயக் கட்டுப்பாட்டுடன் கடமையில் மட்டுமே கவனம் செலுத்தினார். உடலுறுதி பேணு:  முதுகுத்தண்டு மற்றும் முழங்கைக் விரல்களில் அடிக்கடி ஏற்படும் காயம் எனப் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும்போதும் சோர்ந்துவிடாமல் உடல் உறுதியைப் பேணுவதே அடிப்படை என்பதை உணர்ந்தார். செயலில் பதிலளி: அவுட் ஆஃப் ஃபார்ம்’ காரணமாக பல முறை விமர்சிக்கப்படும்போது எல்லாம் வாய் வார்த்தைகளால் பதில் ...

ஒருநாள் போட்டிகளில் சச்சின் ஒரே தேவன்!!!

Image
கடந்த 2011 டிசம்பர் 23... உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி தந்த நாள். கிரிக்கெட் உலகின் கடவுள் என புகழப்படும் சச்சின் அன்றோடு ஒரு நாள் போட்டிகளில் ஆடுவதிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டார். இருபத்தி மூன்று ஆண்டுகள் ஆடிய சச்சினின் ஒவ்வொரு சாதனையும் உலக சாதனை என சொல்கிற அளவுக்கு அவர் கிரிக்கெட்டின் ஈடு இணையில்லாத ஆட்டக்காரராக திகழ்ந்தார் அவர். அவரின் விளையாட்டு ஜாலங்களின் வழியாக ஒரு சின்னப்பயணம் போவோமா? சச்சினை நம்மில் பலருக்கு சிறந்த மட்டைப்பந்து ஆட்டக்காரராக மட்டுமே தெரியும். ஆனால், ஒரே மைதானத்தில் இரண்டு முறை ஐந்து விக்கெட் வீழ்த்திய வீரர் என்கிற பெருமையும் சச்சின் வசமே இருக்கிறது. உலகின் மிகச்சிறந்த அணியாக அவர் காலத்தில் திகழ்ந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக, மிக அதிக ரன்களை சேர்த்தவர் இவரே. ஆஸ்திரேலியா நாட்டில் சச்சினுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமுண்டு. சச்சினின் பெயரில் ஒரு தெருவே இருக்கிறது. உலகின் அதிகபட்ச டெஸ்ட் சராசரி வைத்திருக்கும் டான் பிராட்மன் ‘தன்னைப்போல ஆடுகிறார்’ என சிலாகித்து சொன்ன வீரர் சச்சினே. சச்சினின் வெற்றிகள் சுலபமானதாக இருக்கவில்லை. ஏகப்பட்ட வலிக...

சச்சின் சகாப்தம்

Image
நாங்கள் இந்தியாவுக்கு எதிராகத் தோற்கவில்லை. சச்சின் டெண்டுல்கர் என்னும் தனி மனிதருக்கு எதிராகத் தோல்வி அடைந்திருக்கிறோம்!''- 1998-ம் ஆண்டு சென்னை டெஸ்ட்டில் சச்சினின் அதிரடி சதத்தால் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்தபோது, அந்த அணியின் கேப்டன் மார்க் டெய்லர் சொன்ன வார்த்தைகள் இவை. இந்திய கிரிக்கெட்டில் 'சச்சின் சகாப்தம்’ எத்தனை அழுத்தமானது என்பதை உணர்த்தும் ஓர் உதாரணம் இது! இந்த ஆண்டோடு கிரிக்கெட்டில் 24 ஆண்டுகளை நிறைவு செய்ய இருக்கிறார் சச்சின். ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட நிலையில், டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் விடைபெறகிறார். மேற்கு இந்தியத் தீவுகள் உடனான டெஸ்ட் போட்டிகளில் 200-வது போட்டியோடு அவர் விடைபெறுகிறார். கிரிக்கெட்டில் அறிமுகமான காலம் முதல் சமீப டி-20 டிரெண்ட் வரை தனது தகுதி, திறமைகளை அப்டேட் செய்துவந்த சச்சினிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறையவே இருக்கின்றன. இறுதி வரை போராடு! 16 வயதில் பொடியனாக பாகிஸ்தான் மைதானத்துக்குள் நுழைந்தபோது, முதல் போட்டியில் 15 ரன்கள் அடித்த சச்சின், வக்கார் யூனிஸ் பந்தில் க்ளீன் போல்ட். ''நான் என்னென்ன திட்டங...

இரத்தம் பற்றிய அறிய தகவல்கள்!!!

Image
1. இரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது? ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே “ஹீமோகுளோபின்” என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப் பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில்ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும்போது ரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவார்கள். 2. ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை எவ்வளவு? ஒரு சொட்டு ரத்தத்தில் 55 லட்சம் ரத்த சிவப்பு அணுக்கள் இருக்கும். அதாவது சென்னையின் மக்கள் தொகைக்கு ஏறக்குறைய இணையான அளவுக்கு இருக்கும். 3. ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகும் இடம் எது? எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். இந்த வெற்றிடத்தைச் சுற்றி எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள்,பிளேட்லட்டுகள் உற்பத்தியாகின்றன. 4. ரத்த சிவப்பு அணுகளின் ஆயுள் எவ்வளவு? ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள். ரத்தச் சிவப்பு அணுக்களின் முக்கிய வேதிப் பொருளான ஹீமோகு...

குழந்தைகளுக்கு ஏற்படும் காதுவலி பற்றிய தகவல்கள்!!!

Image
ஜலதோஷம் (சளி), காய்ச்சலுக்கு அடுத்து குழந்தைகளை அதிக அளவில் பாதிப்பது காது வலி, பொதுவாக, பிறந்து ஆறு முதல் இருபது வாரங்கள் ஆன குழந்தைகளுக்கு இந்தக் காது வலி அதிக அளவில் வருகிறது. இந்தக் காது வலியை உடனடியாக குணப்படுத்தாவிட்டால் மீண்டும் வலி ஏற்பட வாய்ப்புகள் மிக மிக அதிகம். மேலும், காதில் சீழ் வடிதல், காது கேளாமல் போதல் போன்ற பிரச்னைகளும் ஏற்படும். இதனால், குழந்தைகளின் பேச்சுத் திறன் கூட பாதிக்கப்படும். சில சமயங்களில், காது வலி தானாகவே சரியாகிவிடும். காரணங்கள் குழந்தைகளுக்கு ஜலதோஷம் (சளி) பிடிக்கும்போது, தொண்டை முழுவதும் புண்ணாகி வீங்கிவிடும். அதனால், தொண்டையில் இருந்து காது வரை செல்லும் யூஸ்டேஷியன் குழாயின் ஒரு முனையானது (தொண்டையில் இருக்கும் குழாய்) அடைபட்டுவிடும். மேலும், காற்று உறிஞ்சப்பட்டு, காதுப்படலமானது உள்நோக்கி நகருவதால், வலி ஏற்படுகிறது. பாதிக்கப்படுபவர்கள் * வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு ஒருமறையாவது காது வலி வந்துவிடும். இரண்டு வயதுக்குப் பிறகு இந்த வலி வருவது குறைந்துவிடும். * பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகள்தான் காது வலியால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ...

கரும்புள்ளிகளை நீக்குவதற்கான சில எளிய வழிகள்!!!

Image
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பதற்கேற்ப நாம் ஒவ்வொருவரும் நமது முகத்தை அழகாக வைத்துக் கொள்ளவே ஆசைப்படுகின்றோம். இன்று பல அழகு நிலையங்கள் வந்த போதிலும், அவற்றில் கட்டணங்கள் அதிகமாக இருக்கின்றன. அதனால், நாம் வீட்டிலேயே இயற்கையான முறையில் சிக்கனமாகவும், நம்மை அழகுப்படுத்திக் கொள்ளலாம். அதற்கான சில வழிகளை இப்பொழுது பார்க்கலாம். கரும்புள்ளிகள் பெரும்பாலும் முகத்தில் தான் தென்படும். பெரும்பாலும் எண்ணெய்ப் பசை உள்ள சருமத்தில் தான் தென்படும். இந்த கரும்புள்ளிகள் பருக்களாக மாறும். ஆகவே ‘வரும் முன் காப்போம்’ என்னும் பழமொழிக்கேற்ப, அவை பருக்களாக மாறும் முன், சரியான சிகிச்சைகளை மேற்கொண்டால், நிச்சயம் அந்த கரும்புள்ளிகளை போக்குவதோடு, சருமத்தை பொலிவோடும் அழகாகவும் வைத்துக் கொள்ளலாம். இப்போது இயற்கை முறையில் கரும்புள்ளிகளை நீக்குவது எப்படி என்று பார்ப்போம். எலுமிச்சை சாறு எலுமிச்சை சாற்றினை முகத்தில் தடவினா,ல் கரும்புள்ளிகளை நீக்குவது மட்டுமல்லாமல், அதிகப்படியான எண்ணெய்ப் பசை சருமத்தில் இருந்தும் விடுபடலாம். சர்க்கரை ஒரு மேஜை கரண்டி சர்க்கரையில் சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து, அதன...

கேன்சர் நோய் - சில உண்மைகள் !!!

Image
குண்டானவர்களுக்கு புற்று நோய் வருமா? கடந்த 16 ஆண்டுகள் ஆராய்ச்சியில் 9 லட்சம் குண்டு பேர்வழிகளின் சுகாதார அறிக்கையையும் அவர்கள் வார்த்தைகளையும் ஆராய்ந்தபோது சில உண்மைகள் தெரிய வந்துள்ளதாக கனடா கேன்சர் மருத்துவ சொசைட்டி கூறியுள்ளது. ஆண்களில் 52 வயதுக்கு மேல் பெண்களில் 62 வயதுக்கு மேல் குண்டாக இருப்பவர்களில் பலருக்கும் புற்றுநோய் வந்துள்ளது. மார்பகம், கருப்பப, குடல், சிறுநீரகம், கல்லீரல், மூத்திரப்பைகள் ஆகியவற்றில் கேன்சர் நோய் இவர்களில் பலருக்கு வந்துள்ளது. குறிப்பாக ஆண்களில் குடல், கல்லீரல், வயிறு, வாய் என்று சில பகுதிகளில் வருவது பொதுவாக உள்ளது. குண்டாக இருப்பவர்களுக்கு மற்றவர்களை விட ஈஸ்ட்ரோஜன், டெஸ்டோரின், இன்சுலின் ஆகிய ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கும். அதனால் புற்றுநோய் வரும் என்று புற்றுநோய் ஆராய்ச்சி மைய நிபுணர் பார்பரா ஒய்லி கூறுகிறார். அதனால் தான் டாக்டர்கள் நாற்பதை தாண்டினால், பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று கூறுகின்றனர். சில முக்கியமான விஷயங்கள்: பெரிய நோ நோ 1. மைக்ரோ வேவ்ல பிளாஸ்டிக் பாத்திரங்கள் கண்டிப்பா வேண்டாம் 2. தண்ணீர் பாட்டிலை ஃப்ரீஸரில் வைக்க வேண்ட...

நரைமுடி தடுக்க என்ன செய்வது?

Image
நரைமுடி இப்போதிய இளைஞர்களிடம் ஒரு பெரிய கவலையாகவே உள்ளது, அதை எந்த இயற்கை வழிகளில் தடுக்கலாம்? 1. சோற்றுக் கற்றாழை யய் இரண்டாகப் பிளந்து உள்ளே சிறிதளவு வெந்தயத்தை வைத்து மூடி விடவும். இரண்டு நாட்கள் கழித்து ஊறிய அந்த வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு அதை தேய்த்து குளிக்க நரை முடியும் கறுப்பாகும். வாரத்திற்க்கு இரண்டு முறை இவ்வாறு செய்யவும் . நரைமுடி போயே போச்சு 2.வாரம் ஒருமுறை முடக்கத்தான் கீரை யை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாதகாலம் செய்து வந்தால், எந்த காரணத்தால் முடி கொட்டினாலும் நின்றுவிடும். அதோடு, இக்கீரை நரை விழுவ தையும் தடுக்கும். முடியும் கருகருவென வளரும். 3. சீயக்காய், நெல்லிக்காய், கடுக்காய், பயற்ற மாவு போன்ற பொருள்களை அரைத்து தலைக்கு பயன்படுத்தலாம் இதனால் முடி உதிர்வும் படி படியாக குறையும்.

சிறுநீரகக் கல் உருவாவது எப்படி?

Image
உடலில் எந்த இடத்திலும் கல் உருவாகலாம். சிறுநீர் பையில், சிறுநீரகத்தில், சிறுநீர் பாதையில் கல் உருவாவது சகஜம். இந்தியாவில் 80 லட்சம் மக்கள் வரை, இந்த உபாதையால் பாதிக்கப்படுகின்றனர். கிட்னி ஸ்டோன்’ என்பதால், அது சிறுநீரகத்தில் மட்டும் தான் ஏற்படும் என்று கருதக் கூடாது. சிறுநீரை வெளியேற்றக் கொண்டு செல்லும் பாதையில் ஏற்படலாம். சிறுநீரைத் தேக்கி வைக்கும் பையில் ஏற்படலாம். சிறுநீரை வெளியேற்றும் இறுதி உறுப்பில் ஏற்படலாம். மிகச்சிறிய கல்லாகவும் தோன்றலாம்; ஒரு எலுமிச்சை அளவுக்கும் ஏற்படலாம். கல்லின் அளவு பொறுத்து, வலியின் தீவிரம் இருக்கும் எனக் கருதுவது தவறு. பெரிய கல், வலியே இல்லாமல் வளரலாம். கண்ணுக்கே தெரியாத சிறிய கல், அதிக வலி கொடுக்கலாம். கல் உருவாவதால் ஏற்படும் வலியை, பிரசவ வலியோடு ஒப்பிடலாம். எவ்வளவு பெரிய பலசாலியையும் ஆட்டிப் போட்டு விடும் இந்த வலி. சிறுநீர் செல்வதில் சிரமம் ஏற்படுவதில் துவங்கி, இருபக்க இடுப்பின் பின் பக்கத்திலிருந்து அலை போல வலி உருவாகி, பிறப்புறுப்பு வரை பரவும். சிரமப்பட்டு வெளியேற்றப்படும் சிறுநீர் அதிக மஞ்சள் நிறத்துடன் காணப்படும். சிலருக்கு சொட்ட...

பெண்கள் பருவமடைவது எப்படி?

Image
ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் இயல்பாக ஏற்படுகின்ற மாற்றங்களான பூப்படைதல், கர்ப்பம், மாதவிடாய் நிறுத்தம் போன்றவை சம்பந்தமாக நிறையப் பேருக்கு நிறைய சந்தேகங்கள் இருக்கலாம். அவை சம்பந்தமான நிறைய மருத்துவப் பிரச்சினைகளும் பெண்களுக்கு ஏற்படலாம். ஆகவே இந்த நிலைமைகள் சம்பந்தமான அடிப்படை விசயங்களை ஒவ்வொரு பெண்களும் அறிந்திருப்பது அவசியமாகும். பூப்படைதல் வெறுமனே உள்ளாடையில் உள்ள ரத்தக்கறையை வைத்துக் கொண்டே நம் பெண்கள் பூப்படைந்து விட்டார்களா இல்லையா என்பதை தீர்மானிக்கும் சமூகமாகவே நாம் இன்னும் இருக்கிறோம். ஒவ்வொருவரும் தன் பிள்ளை பூப்படைந்து விட்டதா என்று 12 அல்லது 13 வயதில் தான் சிந்திக்கிறார்கள். ஆனால் உண்மை நிலைமை அதுவல்ல. முதன் முதலாய் மாதவிடாய் ஏற்படுவதல்ல பூப்படைதல். முதன் முதலாக மாதவிடாய் ஏற்படுவது மெனார்க்கே (menarche) எனப்படுகிறது, இது பூபடைதலின் ஒரு அங்கமே. இந்த menarche எனப்படுவது நாம் அறிந்தது போல 11-12 வயதளவில் தான் ஆரம்பிக்கிறது. ஆனாலும் பூப்படைதல் என்ற செயற்பாடு பெண்களிலே 8 வயதிலேயே தொடங்கி விடுகிறது. நாம் நம் குழந்தைகள் இன்னும் பூப்டையவில்லை என்று மருத்துவரிடம் அழைத்து...

இன்டர்வியூவுக்கு தயாராவது எப்படி?

Image
இன்டர்வியூவுக்கு போகிறீர்களா? அப்படியானால் இது உங்களுக்குத்தான். முதலில் எந்த இடத்தில் இன்டர்வியூ என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். கடைசி நிமி டத்தில் ஆட்டோவில் ஊரைச் சுற்றி வருவதற்குள் இன்டர்வியூ தொடங்கி நடந்து கொண்டிருக்கும். இன்டர்வியூவுக்கே சரியான நேரத்திற்கு வர முடியாதவர், வேலை கொடுத்தால் எப்படி வருவாரோ என்ற சந்தேகம், கிடைக்கவிருக்கும் வேலையை காலி பண்ணி விடும். இன்டர்வியூ உள்ளூர் என்றால், அந்த இடத்துக்கு உங்கள் ஏரியாவில் இருந்து எவ்வளவு தூரம்? பஸ், ரெயில் வசதி உண்டா? அல்லது ஆட்டோ தான் சரியாக இருக்குமா? என்பதை யெல்லாம் இன்டர்வியூவுக்கு முந்தின நாளுக்குள் சரி பார்த்துக் கொள்ளுங்கள். இதுவே வெளியூரில் இருந்து வருகிறீர்கள் என்றால், இன்னும் கவனம் அவசியம். குறிப்பாக திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு இன்டர்வியூ வருகிற ஒருவர், முந்தின நாள் மாலையில் புறப்பட்டு மறுநாள் காலை 9 மணியளவில் தான் சென்னை வர முடியும். இங்கோ இன்டர்வியூ காலை 10 மணிக்கு தொடங்கும். இதற்குப் பிறகு நீங்கள் குளித்து டிபன் முடித்து தயாராகி பைலோடு இன்டர்வியூ நடக்கும் இடத்தை அடைய நிச்சயம் தாமதமாகி விடலாம். இதன...

ஆன்லைனில் ஷாப்பிங் செய்பவர்களுக்கான டிப்ஸ்! உஷார்

Image
எந்தத் துறை நன்கு வளர்கிறதோ, அந்தத் துறையில் மோசடி பேர்வழிகளின் நடமாட்டமும் அதிகமாகவே இருக்கும். இதற்கு இணையமும் விதிவிலக்கல்ல. முக்கியமாக, ஆன்லைன் ஷாப்பிங்கில் இன்று நடக்கும் ஏமாற்றுவேலைகள் கொஞ்சநஞ்சமல்ல. எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள், இதிலெல்லாம் சிக்காமல் இருக்க எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்கவேண்டும் ”ஆன்லைன் ஷாப்பிங்கில் பல நல்ல விஷயங்கள் இருப்பது போல ஏமாற்று விஷயங்களும் இருக்கவே செய்கின்றன. போலி பொருட்களை விற்பது, குறிப்பிட்ட காலத்துக்குள் பொருளை டெலிவரி செய்யாமல் இழுத்தடிப்பது, போலி தளங்களை உருவாக்கி ஏமாற்றுவது என சில விஷயங்கள் இதில் உள்ளன.  TimTara என்ற ஆன்லைன் ஷாப்பிங் இணையதளத்தின் நிறுவனர் ஏமாற்று நடவடிக்கைகளால் கைது செய்யப்பட்டார். அந்த இணையதளமும் அதன்பின்னர் மூடப்பட்டது. இதுபோன்ற சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்கின்றன. கவர்ச்சி விளம்பரங்கள்! கவர்ச்சிகரமான விளம்பரங்களைச் செய்வதன் மூலம் கனஜோராக மோசடி செய்கின்றன பல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள். அதாவது, 50,000 ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை வெறும் 500 ரூபாய்க்குத் தருவதாக விளம்பரங்கள் செய்யும். இதை நம்பி பலரும் ...