சச்சினின் சக்சஸ் ரகசியங்கள்!!!
ஆர்வம்கொள்:
இளம் வயது சச்சினின் கிரிக்கெட் குருநாதர் ரமாகாந்த் அச்ரேகர். அவரிடம் பயிற்சி எடுத்தபோது, மைதானத்துக்கு முதல் ஆளாக வரும் சச்சின், வீடு திரும்புவதில் கடைசி ஆளாக இருப்பார்.
![Posted Image](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_tmik1uekLUJWmMJHVIp5Zk2a4I1gTUMbS2DODPPdzouPjgmx0zIvokCJiqgGlm5vln1qN-Lv8-mHqJWqHn2raN0NJuXq-0Qx2dE4lBXLhKwXee0Z-3=s0-d)
பயிற்சி தவறேல்:
போட்டிகள் இருக்கிறதோ இல்லையோ, அன்றாடம் பேட் பிடித்து பயிற்சி செய்யத் தவறியதே இல்லை. 'நாமதான் கில்லியாச்சே’ என்று ஒரு நாளும் நினைத்தது இல்லை.
வியூகம் வகுத்திடு:
புதுவிதமானத் தடைகள் வந்தால், அதற்கு ஏற்றபடி வியூகம் வகுத்து ஜெயிப்பார். எந்த பௌலர் தன்னை அடிக்கடி அவுட் ஆக்குகிறாரோ, அவரது பந்துகளை எதிர்கொள்ள சிறப்புப் பயிற்சி எடுப்பார்.
ஒழுக்கம் போற்று: இளம் வயதில் உலகப் புகழும், கோடிக் கணக்கான பணம் கிடைத்தபோதும் சுயக் கட்டுப்பாட்டுடன் கடமையில் மட்டுமே கவனம் செலுத்தினார்.
உடலுறுதி பேணு:
முதுகுத்தண்டு மற்றும் முழங்கைக் விரல்களில் அடிக்கடி ஏற்படும் காயம் எனப் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும்போதும் சோர்ந்துவிடாமல் உடல் உறுதியைப் பேணுவதே அடிப்படை என்பதை உணர்ந்தார்.
செயலில் பதிலளி:
அவுட் ஆஃப் ஃபார்ம்’ காரணமாக பல முறை விமர்சிக்கப்படும்போது எல்லாம் வாய் வார்த்தைகளால் பதில் அளிக்கும் பழக்கம் இல்லை. தன் ஆட்டத்தின் மூலமே தொடர்ந்து பதிலடி தந்தார்.
குழுவாகச் செயல்படு:
எந்த ஒரு வெற்றிக்குப் பின்னாலும் குழு ஒற்றுமை மிக முக்கியம் என்பது சச்சினுக்குத் தெரியும். தனது சக வீரர்களுடன் இணைந்து அணியின் வெற்றியை மட்டுமே நோக்கமாகக்கொண்டு செயல்பட்டார்.
உன்னை நீ நம்பு:
ஓர் ஆண்டு காலமாக 100-வது சதத்தை அடிக்க முடியாமல் திணறியபோதும் தன்னம்பிக்கையை இழக்கவில்லை. இடைவிடாமல் முயன்று அந்தச் சாதனையையும் வசப்படுத்தினார்.
சமூகநலன் கருது:
சுயநலனுக்காக பொதுநலனைத் தவிர்க்கக் கூடாது. பல கோடி ரூபாய் கொடுக்க முன்வந்தபோதும் 'மதுபானத் தயாரிப்புகளை நான் விளம்பரப்படுத்துவது இல்லை’ என மறுத்தார் சச்சின்.
கனவைக் கைவிடேல்:
உலகக் கோப்பையை வெல்லும் இந்திய அணியில் இருக்க வேண்டும் என்பதுதான் சச்சினின் முதல் கனவு. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு, 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையில் அது நிறைவேறியது. கனவைக் கைவிடாமல் பயணித்தால், அதை அடைவது உறுதி என்பதை நாமும் உணரலாம்.

Comments
Post a Comment