நரைமுடி தடுக்க என்ன செய்வது?

நரைமுடி இப்போதிய இளைஞர்களிடம் ஒரு பெரிய கவலையாகவே உள்ளது,

Image result for whitehair problem


அதை எந்த இயற்கை வழிகளில் தடுக்கலாம்?

1. சோற்றுக் கற்றாழையய் இரண்டாகப் பிளந்து உள்ளே சிறிதளவு வெந்தயத்தை வைத்து மூடி விடவும்.
இரண்டு நாட்கள் கழித்து ஊறிய அந்த வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு அதை தேய்த்து குளிக்க நரை முடியும் கறுப்பாகும்.
வாரத்திற்க்கு இரண்டு முறை இவ்வாறு செய்யவும் . நரைமுடி போயே போச்சு

2.வாரம் ஒருமுறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாதகாலம் செய்து வந்தால், எந்த காரணத்தால் முடி கொட்டினாலும் நின்றுவிடும். அதோடு, இக்கீரை நரை விழுவ தையும் தடுக்கும். முடியும் கருகருவென வளரும்.

3.சீயக்காய், நெல்லிக்காய், கடுக்காய், பயற்ற மாவு போன்ற பொருள்களை அரைத்து தலைக்கு பயன்படுத்தலாம் இதனால் முடி உதிர்வும் படி படியாக குறையும்.


Comments