புத்தாண்டு கேக் செய்வது எப்படி?
புத்தாண்டு கேக் தேவை: வெள்ளை ரவை - 2 கப், பொடித்த சர்க்கரை - ஒன்றரை கப், பால் - 2 கப், தயிர் - ஒரு கப், நெய் - அரை கப், உப்பு - அரை டீஸ்பூன், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா - தலா ஒரு டீஸ்பூன், ஜாதிக்காய் (பொடித்தது) - கால் டீஸ்பூன், மெலிதாகச் சீவிய பாதாம், முந்திரித் துண்டுகள் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், மைதா மாவு - ஒரு டேபிள்ஸ்பூன். செய்முறை: ஒரு பாத்திரத்தில் வெள்ளை ரவை, பொடித்த சர்க்கரை இரண்டையும் சேர்த்துக் கலக்கவும். பிறகு உப்பு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் மூன்றையும் அதில் சேர்த்துக் கலந்து நெய் சேர்த்துக் கலக்கவும். பால், தயிர் இரண்டையும் மிக்ஸியில் ஓர் அடி அடித்து அதில் சேர்த்து பொடித்த ஜாதிக்காயையும் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலக்கவும். விஸ்க் (அ) மத்து (மோர்கடைவது) இரண்டில் எது இருந்தாலும் ஒரே முறையாக (வலது பக்கம் அடித்தால் வலது பக்கமாக, இடது பக்கம் அடித்தால் இடது பக்கமாக) கலந்து 20 நிமிடங்கள் வைக்கவும். பிறகு ஒரு நான்-ஸ்டிக் பானில் (pan) ஒரு ட்ரேஸ் பேப்பர் போட்டு அதன் மேலே நெய் தடவி மைதா மாவைத் தூவி, கலந்த மாவு கலவையை அதில் ஊற்...