அரை நெல்லிக்காய்ப் பாயசம் செய்வது எப்படி? துவாதசி தின விருத ஸ்பெஷல்!!!

அரை நெல்லிக்காய்ப் பாயசம்
தேவை: அரை நெல்லிக்காய் - ஒரு கப், துருவிய வெல்லம் - ஒரு கப், தேங்காய்ப்பால் (திக்கானது) - அரை கப், பல்லுப் பல்லாக கீறிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், நெய் - 4 டேபிள்ஸ்பூன், மெலிதாகச் சீவிய பாதாம், முந்திரி - தலா ஒரு டேபிள்ஸ்பூன்.
vikatan%2F2019-12%2F7278e572-b8de-455e-8
 
செய்முறை: வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்விட்டு தேங்காய்க்கீற்றை வறுத்துத் தனியே வைக்கவும். அதே வாணலியில் மீண்டும் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்விட்டு சீவிய பாதாம், முந்திரியை வறுத்துத் தனியே வைக்கவும். மீண்டும் 2 டேபிள்ஸ்பூன் நெய்விட்டு அரை நெல்லிக்காயை விதை நீக்கி சேர்த்து வதக்கி ஒரு கப் நீர்விட்டு வேகவிடவும். நெல்லிக்காய் வெந்ததும் வெல்லத் துருவல் சேர்த்து இரண்டு கொதிவிட்டு தேங்காய்ப்பால் சேர்த்து மீண்டும் ஒரு கொதிவிடவும். இதில் ஏலக்காய்த்தூள் தூவி, வறுத்துவைத்துள்ள தேங்காய்க் கீற்று, பாதாம், முந்திரி சீவல்களைச் சேர்த்து இறக்கவும். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்துவிடவும்.
சிறப்பு: ஏகாதசி விரதம் இருந்து மறுநாள் துவாதசி அன்று காலை இந்த நெல்லிக்காய், தேங்காய்ப்பால் சேர்த்த பாயசம் சாப்பிட்டால், வயிற்றுக்கு மிகவும் நல்லது.

Comments