ஏகாதசி கஞ்சி செய்வது எப்படி? ஏகாதசி தின ஸ்பெஷல்!!!

காதசி கஞ்சி
தேவை: பயத்தம்பருப்பு - ஒரு கப், துருவிய வெல்லம் - ஒரு கப், பால் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்.
vikatan%2F2019-12%2F28f07516-55f3-4590-b
செய்முறை: பயத்தம்பருப்பை வெறும் வாணலியில் வறுத்து நீர் சேர்த்து வேகவிடவும். வெந்த பருப்புடன் துருவிய வெல்லம் சேர்த்து இரண்டு கொதிவிட்டு, பாலைச் சேர்த்து ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்துவிடவும்.
சிறப்பு: ஏகாதசி அன்று இந்தக் கஞ்சியைச் செய்து பகவானுக்குப் படைத்து பிறகு அருந்தவும். அன்று முழுவதும் விரதம் இருப்பவர்கள், இந்தக் கஞ்சியை அருந்தினால் உடலுக்குத் தெம்பு கிடைக்கும்.

Comments