Posts

Showing posts from August, 2019

விரத தோசை செய்வது செய்வது எப்படி? விருத நாட்கள் ஸ்பெஷல்!!!

Image
விரத தோசை தேவை:  ஜவ்வரிசி - கால் கப், சாமை அரிசி - ஒரு கப், இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, நெய் - 2 டேபிள்ஸ்பூன். செய்முறை:  ஜவ்வரிசி, சாமை அரிசி இரண்டையும் தனித்தனியாக ஆறு மணி நேரம் ஊறவைக்கவும். ஊறியதும் இரண்டையும் சேர்த்து நைஸாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை ஊற்றி உப்பு சேர்த்து சீரகம், நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலந்து மாவை ரவா தோசை மாவு பதத்தில் கரைக்கவும் (தேவைப்பட்டால் நீர் சேர்த்துக் கரைக்கலாம்). மாவை ரவா தோசை மாதிரி ஊற்றி ஓரங்களில் சிறிதளவு நெய்விட்டு ஒருபுறம் வெந்ததும் மறுபுறமும் திருப்பிப்போட்டு எடுக்கவும். சிறப்பு:   விரத நாள்களில் சிலர் இதுபோல் தானியங்களை வைத்து தயாரித்த உணவுகளை மட்டுமே உண்பர்.

குடற்புழுவை நீக்க ஒரு சிறந்த மருத்துவ வழி !!!

Image
இயற்கை மனிதனுக்கு எந்த அளவு ஆரோக்கியம் தரும் பொருட்களை கொடுத்துள்ளதோ, அதை சீராக பயன்படுத்தி நலம் பெற நினைக்காத மனிதன் அதை தீமையாக்கி தன் ஆரோக்கியத்தைக் கெடுத்து வாழ்கிறான். உணவு, பாதுகாப்பற்ற குடிநீர், மாசடைந்த காற்று இவற்றால் மனிதனுக்கு பலவிதமான நோய்கள் உண்டாகின்றன. ஒரு நாட்டின் பொருளாதார நிலை, மக்களின் தனிப்பட்ட வாழ்வாதார சூழ்நிலை இவைகளைப் பொறுத்தே உடல்நிலை அமைகிறது. மனிதனின் முறையற்ற உணவுப் பழக்கத் தாலும், உணவாலும், உடல் நோய்க்கு ஆளாக நேரிடுகிறது. இந்த வகையில் உணவின் மூலம் உடலுக்கு சென்று பல்கிப் பெருகி உடலை பாழ்படுத்தும் சிறுகுடற் புழுக்களும் உண்டு. இவை உணவின் மூலம் உடலுக்குச் செல்வதோடு, சில சமயங்களில் சருமத்தின் மூலமும், நீரின் மூலமும் செல்கிறது. இவ்வாறு உடலுக்குச் சென்று உடலில் குடித்தனம் நடத்தும் புழுக்கள் நாற்பது வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் சிறுகுடற் புழு. Ascaris lumbri coides என்னும் சிறுகுடற்புழு எல்லா நாட்டு மக்களின் உடலிலும் காணப்படுகிறது. குறிப்பாக ஆசிய நாடுகளில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், மியான்மர், சீனா போன்ற நாடுகளிலும், பசிபிக் தீவு, பகுதிகளில் வாழும் ...

நரை முடியை கருமையாக்க உதவும் பொருட்கள்! என்னென்ன?

Image
பொதுவாக நரைமுடியை 30-40 வயதிற்கு மேல் தான் சந்திப்போம். ஆனால் தற்போது இளமையிலேயே முடியானது நரைத்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது. இத்தகைய நரை முடி இளமையில் வருவதற்கு பரம்பரை ஒரு காரணமாக இருந்தாலும், அதிகப்படியான சுற்றுச்சூழல் மாசுபாடு, அதிகளவு மன அழுத்தம் போன்றவற்றால் இளமையிலேயே முடியானது எளிதில் வெள்ளையாகிறது. அதுமட்டுமின்றி, ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கவழக்கங்களால், முடிக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல், நரைமுடி, கூந்தல் உதிர்தல் போன்றவை ஏற்படுவதோடு, வழுக்கை தலைக்கும் ஆளாகின்றனர். ஆகவே இந்த மாதிரியான பிரச்சனைகளை சந்தித்தால், அதற்கு முடியை சரியாக பராமரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம். பொதுவாக நரைமுடியை போக்குவது சற்று கடினமானதாக இருந்தாலும், முறையாக நம்பிக்கையுடன் முடியை சரியாக பராமரித்து வந்தால், நிச்சயம் முடியை கருமையாக்க முடியும். இங்கு அத்தகைய நரைமுடியை கருமையாக்க உதவும் சில பொருட்களைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை தவறாமல் பின்பற்றி வாருங்கள். நிச்சயம் நரை முடி பிரச்சனையில் இருந்து விடுபடலாம். இஞ்சி நரை முடியை கருமையாக்க வேண்டுமானால், இஞ்சியைத் து...

உடல் துர்நாற்றம் போக்க வழி என்ன?

Image
உடல் துர்நாற்றம் என்பது உலகில் பெரும்பாலானோருக்கு உள்ளதுதான்.. தவிர்க்க முடியாத சூழ்நிலையில் உடல் துர்நாற்றமுடையவருடன் பேசும்பொழுது, ஒரு வித தர்ம சங்கடம் ஏற்படும். சிலர் நன்றாக சோப்புப் போட்டு குளித்திருப்பார்கள்.. வாசனை திரவியங்களையும் பயன்படுத்தியிருப்பார்கள். ஆனாலும் அவற்றையெல்லாம் மீறி அவர் அருகில் வந்தாலே அவர்களிடமிருந்து துர்நாற்றம் குடலைப் பிடுங்கும்.. சிலருக்கு அதிக வியர்வையாலும், இந்த துர்நாற்றம் வீசும். சிலர் அருகில் வந்தாலே கற்றாழை வாடை கப்பென்று மூக்கை துளைக்கும்.. இதற்கு காரணம் நிச்சயமாக அவர்கள் உடலில் வேண்டாத நீர்மங்கள் வெளியேறுவதுதான்.. சில உணவுகளை வகைகளைச் சேர்ப்பதால் கூட துர்நாற்றம் வீசும். உதாரணமாக Red Meat என்று சொல்லக்கூடிய பீஃப், மட்டன் போன்றவைகளை சேர்ப்பதன் மூலம் இந்த துர்நாற்றம் வீசும். காரணம் இது ஜீரணமாக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதன்மூலம் ஏற்படும் கெட்ட நீரானது வியர்வையாக வெளியேறும். அதனால் துர்நாற்றம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். முடிந்தளவு இந்த வகை உணவுகளை குறைத்துக்கொள்வது நலம். பால்பொருட்கள் அனைத்தும் துர்நாற்றம் ஏற்பட காரணமாக அமைகிறது. இரவ...

சிறுநீர் கழிக்கும் போதோ அல்லது கழித்தப் பின்போ எரிச்சலா இருக்கா? வைத்தியம் என்ன?

சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போதோ அல்லது கழித்தப் பின்போ, ஒருவித எரிச்சல் ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால், அதற்கு உடனே சிறுநீர் பாதையில் தொற்றுநோய் என்று அர்த்தம் இல்லை. அதிலும் இந்த மாதிரியான பிரச்சனையில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே அவஸ்தைப்படுகின்றனர். ஏனெனில் அவர்கள் அடிக்கடி கழிவறைக்கு செல்ல முடியவில்லை என்று வெளியேறும் கழிவுகளை அடக்கி வைக்கின்றனர். இதனை சரிசெய்தால் மட்டும், எரிச்சல் ஏற்படுவதை தடுக்க முடியாது. இந்த மாதிரியான பிரச்சனை ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவை என்னவென்று தெரிந்து கொள்வதோடு, அதற்கான வீட்டு மருத்துகளையும் தெரிந்து கொண்டு, பின்பற்றி வந்தால், சிறுநீர் கழித்தப் பின் ஏற்படும் எரிச்சலைத் தடுக்கலாம். எரிச்சல் ஏற்படுவதற்கான காரணங்கள்: * சிறுநீர் பாதை தொற்றுநோய் * உடலில் நீர் வறட்சி * சிறுநீரக கற்கள் * கல்லீரல் பிரச்சனை * அல்சர் * பிரசவத்திற்கு முன்னோ அல்லது பின்போ நரம்புகளில் பாதிப்பு இருப்பது * விந்து அல்லது விரைகளில் உள்ள தொற்றுநோய் * பால்வினை நோய் * பெரிதான புரோஸ்டேட் * நீரிழிவு * ஊட்டச்சத்துக் குறைவு * குறுகிய ச...

திருவாதிரை தாளகக் குழம்பு (ஏழு காய் குழம்பு) செய்வது எப்படி? மார்கழி மாத ஸ்பெஷல்!!!

Image
திருவாதிரை தாளகக் குழம்பு (ஏழு காய் குழம்பு) தேவை:  பறங்கிக்காய், வாழைக்காய், சர்க்கரைவள்ளிக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சேனைக்கிழங்கு, கொத்தவரங்காய், பூசணிக்காய் (எல்லாவற்றையும் ஒரே அளவுள்ள துண்டுகளாக நறுக்கியது) - 2 கப், திக்கான புளிக்கரைசல் - அரை கப், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப. வறுப்பதற்கு: பச்சரிசி - 2 டேபிள்ஸ்பூன், கறுப்பு எள் - ஒரு டேபிள்ஸ்பூன், துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, தேங்காய்த் துருவல் - கால் கப், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், மல்லி (தனியா) - 2 டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன். தாளிக்க: எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - 8 இதழ்கள், கடுகு - ஒரு டீஸ்பூன். செய்முறை:  வெறும் வாணலியில் பச்சரிசியை சிவக்க வறுத்து தனியே வைக்கவும். பிறகு கறுப்பு எள்ளையும் வறுத்துத் தனியே வைக்கவும். அதே வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டு துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, மல்லி, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் ஒவ்வொன்றாகப் போட்டு வறுத்து இறுதியில் தேங்காய்த் துருவலையும் சேர்த்து இரண்...

தூக்கம் வரலையா?

Image
இன்சோம்னியா எனப்படும் தூக்கக்குறைபாடு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் செர்ரி பழ ஜூஸ் குடிப்பதன் மூலம் அந்த நோயினை குணப்படுத்தலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நியூயார்க்கிலுள்ள ரோசஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. இரவில் தூக்கம் வராமல் தவிக்கும் நோய் ஏராளமானோருக்கு உண்டு. வயதானவர்களில் 4-ல் ஒருவருக்கு இந்த நோய் உண்டு. இந்த நோய் இன்சோம்னியா என்று அழைக்கப்படுகிறது. இந்த நோயை விரட்டுவதற்கு செர்ரி பழ ஜூஸ் போதும் என்கிறார் ரோசஸ்டர் பல்கலைக்கழக பேராசிரியரும், உளவியல் நிபுணருமான டாக்டர் வில்பிரட் பிஜியான்.  1.மன உளைச்சல் ஏற்படும் தூக்கமின்மை என்பது சாதாரணமாக விடக்கூடியது அல்ல. அதை உடனே சரிசெய்ய வேண்டும். கடின உழைப்புக்கு பின்பு இரவில் உறக்கம் இன்றி அவதிப்படுவது அடுத்த நாளின் இயல்பு வேலைகளை பாதிக்கும்.இந்த நிலை தொடர்ந்து நீடிக்கும்போது மன உளைச்சல் ஏற்பட்டு நோயாளியாக மாறும் நிலை ஏற்படும் சாத்தியங்களும் அதிகம். இன்சோம்னியா நோயால் பாதிக்கப்படுபவர்கள் இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுவார். அப்படியே தூக்கம் வந்தாலும் விரைவில் எழுந்துவ...

தேங்காய் வடை செய்வது எப்படி? மார்கழி மாத ஸ்பெஷல்!!!

தேங்காய் வடை தேவை:  துருவிய தேங்காய் - 2 கப், சீரகம் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, பொட்டுக்கடலை - 3 டேபிள்ஸ்பூன், இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன், பச்சரிசி மாவு - 6 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை:   தேங்காய்த் துருவலுடன் பச்சை மிளகாய், உப்பு, பொட்டுக்கடலை சேர்த்து நீர்விட்டு கெட்டியாக, நைஸாக அரைக்கவும். அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு, இஞ்சித் துருவல், கொத்தமல்லித்தழை, சீரகம், பச்சரிசி மாவு சேர்த்துப் பிசையவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து பிசைந்த மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு, ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபுறமும் வெந்ததும் எடுக்கவும். சிறப்பு:   பழப்பாயசத்துக்கு இந்த தேங்காய் வடையைத் தொட்டு சாப்பிடலாம்.

காராமணி வடை செய்வது எப்படி? மார்கழி மாத ஸ்பெஷல்!!!

Image
காராமணி வடை தேவை:   வெள்ளைக் காராமணி (உலர்ந்தது) - ஒரு கப், அரிசி மாவு - 4 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 2, கொரகொரப்பாக பொடித்த மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், இஞ்சித் துருவல் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லி இலைகள் - தலா 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - 6 இதழ்கள், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை:   வெள்ளைக் காராமணியை மூன்று மணி நேரம் நீரில் ஊறவிடவும். பிறகு கைகளால் தேய்த்து மீண்டும் நீர்விட்டுக் கழுவினால் மேல் தோல் நீங்கிவிடும். தோல் நீங்கிய காராமணியை உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து நைஸாக, கெட்டியாக அரைக்கவும். இதனுடன் அரிசி மாவு, இஞ்சித் துருவல், மிளகுத்தூள், பெருங்காயத்தூள், புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலைகள் சேர்த்துப் பிசையவும். எண்ணெயைக் காயவைத்து மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு பொரித்தெடுக்கவும்.

ஒரு நிமிட வித்தைகள்

1.தொழில் வல்லுநர்களுக்கு உங்கள் காலணிகள் பிரகாசிக்க வாழைப்பழத் தோலைப் பயன்படுத்துங்கள் இது இயற்கையானது, ரசாயனங்கள் இல்லை மற்றும் உங்கள் கம்பளத்தை கறைபடுத்தும் ஆபத்து இல்லை. 2.அனைத்து சமையலறைகளுக்கும். வெங்காயத்தை வெட்டுவதற்கு முன்பு கனோனா / ஆலிவ் எண்ணெயை உங்கள் கத்திகளில் தேய்க்கலாம் . 3.அனைத்து வேலை தேடுபவர்களுக்கும். ஒரு வேலை நேர்காணலுக்குப் பிறகு, “உங்களிடம் ஏதேனும் கேள்விகள் இருக்கிறதா?” என்று கேட்டால், “ஆம், உங்களைப் பற்றி கவலைப்படுகிற எனது பயன்பாட்டைப் பற்றி ஏதாவது இருக்கிறதா?” என்று எப்போதும் கூறுங்கள். 4.உடல் சூடானவர்களுக்கு  உங்கள் மணிக்கட்டை குறைந்தது 5 நிமிடங்களுக்கு ஒரு குளிர் குழாய் கீழ் இயக்கவும். இது உங்கள் இரத்தத்தை குளிர்விக்கும். 5.மூக்கு ஒழுகுதல்? உங்கள் நாக்கை உங்கள் வாயின் மேற்புறத்தில் தள்ளி, உங்கள் புருவங்களுக்கு இடையில் ஒரு விரலை சுமார் 20 -30 வினாடிகள் அழுத்துங்கள். 6. ஒரு முள் பிளவை வெளியே எடுக்க முடியவில்லையா? பேக்கிங் சோடா பேஸ்ட்டை தண்ணீரிருடன் கலந்து  பயன்படுத்துங்கள், பின்னர் முள் பிளவு தோலில் இருந்து வெளியேறும் வர...