தேங்காய் வடை செய்வது எப்படி? மார்கழி மாத ஸ்பெஷல்!!!
தேங்காய் வடை
தேவை: துருவிய தேங்காய் - 2 கப், சீரகம் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, பொட்டுக்கடலை - 3 டேபிள்ஸ்பூன், இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன், பச்சரிசி மாவு - 6 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
தேங்காய்த் துருவலுடன் பச்சை மிளகாய், உப்பு, பொட்டுக்கடலை சேர்த்து நீர்விட்டு கெட்டியாக, நைஸாக அரைக்கவும். அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு, இஞ்சித் துருவல், கொத்தமல்லித்தழை, சீரகம், பச்சரிசி மாவு சேர்த்துப் பிசையவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து பிசைந்த மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு, ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபுறமும் வெந்ததும் எடுக்கவும்.
சிறப்பு:
பழப்பாயசத்துக்கு இந்த தேங்காய் வடையைத் தொட்டு சாப்பிடலாம்.
Comments
Post a Comment