காராமணி வடை செய்வது எப்படி? மார்கழி மாத ஸ்பெஷல்!!!
காராமணி வடை
தேவை:
வெள்ளைக் காராமணி (உலர்ந்தது) - ஒரு கப், அரிசி மாவு - 4 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 2, கொரகொரப்பாக பொடித்த மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், இஞ்சித் துருவல் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லி இலைகள் - தலா 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - 6 இதழ்கள், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
![vikatan%2F2019-12%2F95de5e2b-a9ca-4236-a](https://images.assettype.com/vikatan%2F2019-12%2F95de5e2b-a9ca-4236-a1e8-7d6e1e522e16%2F119.jpg?w=640&auto=format%2Ccompress)
செய்முறை:
வெள்ளைக் காராமணியை மூன்று மணி நேரம் நீரில் ஊறவிடவும். பிறகு கைகளால் தேய்த்து மீண்டும் நீர்விட்டுக் கழுவினால் மேல் தோல் நீங்கிவிடும். தோல் நீங்கிய காராமணியை உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து நைஸாக, கெட்டியாக அரைக்கவும். இதனுடன் அரிசி மாவு, இஞ்சித் துருவல், மிளகுத்தூள், பெருங்காயத்தூள், புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலைகள் சேர்த்துப் பிசையவும். எண்ணெயைக் காயவைத்து மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு பொரித்தெடுக்கவும்.
Comments
Post a Comment