நீங்கள் சாப்பிடுவது உணவா? விஷமா??
நம் நாட்டில் சர்க்கரை நோயாளிகள் அதிகமாக இருப்பதற்குக் காரணங்கள் நிறைய உண்டு. நம்மவர்களின் மரபணுக்கள்தான் (Genes) காரணம்; நம்நாட்டின் தட்பவெப்ப சுற்றுச்சூழல்தான் பிரச்னையே உடல் உழைப்பு மிகவும் குறைந்துவிட்டதை மறந்துவிடக் கூடாது என்றெல்லாம் பட்டிமன்ற பாணியில் அவை விவாதிக்கப்படுகின்றன. இதில், ‘அரிசியை மையப்படுத்திய நம் உணவுப் பழக்கமே உண்மையான காரணம்’ என்பதும் முக்கியமாக பேசப்படுகிறது! இத்தகைய சூழலில்… ‘சர்க்கரை நோய்க்கும் அரிசிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை’ என்று சமீப காலம் வரை பெரும்பாலான டாக்டர்கள் (சர்க்கரை நோய் நிபுணர்கள் உட்பட) உறுதியாக சொல்லிக் கொண்டிருந்த வாதம்… தற்போது முற்றாக உடைபட்டு போயிருக்கிறது. ஒவ்வொரு உணவும் வயிற்றுக்குள் போய் ஜீரணமாகி, எவ்வளவு சீக்கிரம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகப்படுத்துகிறது என்பதை கணக்கிடுவதற்கு ‘கிளைசீமிக் இண்டெக்ஸ்’ (Glycemic Index)என்று பெயர். சுருக்கமாக ‘ஜிஐ’ (GI). சுத்த சர்க்கரையான குளுக்கோஸின் ‘ஜிஐ’ 100. இதை அடிப்படை அளவுகோலாக வைத்து மற்ற உணவுகளையும் கணித்திருக்கிறார்கள். 100-70 வரை ‘ஜிஐ’ உள்ள உணவுகளை, ‘அதிக ஜிஐ’ என்றும், 70-55 வர...