சுண்டைக்காய் பொரித்த குழம்பு செய்வது எப்படி?

சுண்டைக்காய் பொரித்த குழம்பு

தேவை: 
அதிகம் முற்றாத பிஞ்சான சுண்டைக்காய் - அரை கப், அவரைக்காய் - 8, பயத்தம்பருப்பு - கால் கப், மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன். அரைப்பதற்கு: தேங்காய்த் துருவல் - 5 டேபிள்ஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன். தாளிக்க: எண்ணெய், கடுகு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - 6 இதழ்கள்.

vikatan%2F2019-12%2F786e00d1-f397-4840-8

செய்முறை:
பயத்தம்பருப்பை நீர் சேர்த்து குழைய வேகவிடவும். அரைப்பதற்குக் கொடுத்தவற்றை நீர்விட்டுக் கெட்டியாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சுண்டைக்காயை இரண்டாக நறுக்கிப்போட்டு வதக்கவும். ஒரு பாத்திரத்தில் அவரைக்காயை நறுக்கிப்போட்டு வதக்கிய சுண்டைக்காய் சேர்த்து உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நீர்விட்டு வேகவிடவும். காய்கள் வெந்ததும் வெந்த பருப்பைச் சேர்த்து அரைத்த விழுதைச் சேர்த்து இரண்டு கொதிவிட்டு, தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்துச் சேர்த்து இறக்கவும். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்துவிடவும்.

Comments