ஏகாதசி சத்து மாவு செய்வது எப்படி? ஏகாதசி தின ஸ்பெஷல்!!!

ஏகாதசி சத்து மாவு
தேவை: பச்சரிசி - 2 கப், துருவிய வெல்லம் - ஒரு கப், தேங்காய்த் துருவல் - கால் கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்.
vikatan%2F2019-12%2Fb577081f-7106-43e8-b

செய்முறை: அரிசியை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை சிவக்க வறுத்து, சற்று ஆறியதும் மிக்ஸியில் நீர்விடாமல் நைஸாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் துருவிய வெல்லத்தைப் போட்டு கால் கப் நீர்விட்டு அடுப்பிலேற்றி ஒரு கொதிவிட்டு இறக்கவும். ஆறியதும் ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவு, ஏலக்காய்த்தூள், துருவிய தேங்காய் சேர்த்து வெல்லத்தண்ணீர் சேர்த்துப் பிசையவும். சப்பாத்தி மாவைவிட சற்று கெட்டியான பதமாக இருக்க வேண்டும்.
சிறப்பு: பிசைந்த சத்து மாவைப் பகவானுக்குப் படைத்த பின், நாம் சாப்பிடலாம். அன்று முழுவதும் விரதம் இருப்பதால் வெல்லத்திலுள்ள இரும்புச் சத்து கிடைப்பதுடன், தேங்காயானது வயிற்றில் (விரதம் இருப்பதால்) புண் வராமல் தடுக்கும்.

Comments