நீங்கள் சாப்பிடும் மருந்து தரமானதா?
அமெரிக்காவில் கடைப்பிடிக்கப்படும் தரக்கட்டுப்பாட்டு விதிகளைப் பின்பற்றி நாமும் நடப்பதாக இருந்தால், இந்தியாவில் மருந்துகளைத் தயாரிக்கும் அத்தனை தொழிற்சாலைகளையும் மூட வேண்டியிருக்கும்!- இப்படி அதிரடியாக சொல்லியிருப்பது யாரோ கலகக்காரர் இல்லை; போராடும் மனித உரிமை ஆர்வலரும் இல்லை; இந்தியாவில் மருந்து தயாரிப்புகளை முறைப்படுத்தும் ‘இந்திய டிரக் கன்ட்ரோலர் ஜெனரல்’ பொறுப்பில் இருக்கும் ஜி.என்.சிங். ‘உலகின் மலிவுவிலை மருத்துவத் தலைநகரம்’ என இந்தியாவை பெருமையோடு சொல்வார்கள். ஆனால் இப்போது இந்தியாவுக்கு நேரம் சரியில்லை. இந்திய மருந்துகளை தரமற்றவை என நிராகரிப்பது, மருந்து தொழிற்சாலைகளை மூடச் சொல்வது, தரச் சான்றிதழ்களை திரும்பப் பெறுவது என உலக நாடுகள் அதிரடி காட்டுகின்றன. பெரிய நிறுவனங்கள் பலவும் ஏற்றுமதிக்கு தனியாகவும், உள்ளூருக்குத் தனியாகவும் உற்பத்தி செய்கின்றன. ஏற்றுமதித் தரமே இப்படி என்றால், உள்ளூரில் நாம் சாப்பிடும் மருந்து பாதுகாப்பானதா? * கொழுப்பைக் குறைக்கும் ‘லிபிடர்’ என்ற மாத்திரையை அமெரிக்க மார்க்கெட்டிலிருந்து இந்தியாவின் ரான்பாக்ஸி நிறுவனம் திரும்பப் பெற நேர்ந்தது. மருந்தில்...