Posts

நீங்கள் சாப்பிடும் மருந்து தரமானதா?

Image
அமெரிக்காவில் கடைப்பிடிக்கப்படும் தரக்கட்டுப்பாட்டு விதிகளைப் பின்பற்றி நாமும் நடப்பதாக இருந்தால், இந்தியாவில் மருந்துகளைத் தயாரிக்கும் அத்தனை தொழிற்சாலைகளையும் மூட வேண்டியிருக்கும்!- இப்படி அதிரடியாக சொல்லியிருப்பது யாரோ கலகக்காரர் இல்லை; போராடும் மனித உரிமை ஆர்வலரும் இல்லை; இந்தியாவில் மருந்து தயாரிப்புகளை முறைப்படுத்தும் ‘இந்திய டிரக் கன்ட்ரோலர் ஜெனரல்’ பொறுப்பில் இருக்கும் ஜி.என்.சிங். ‘உலகின் மலிவுவிலை மருத்துவத் தலைநகரம்’ என இந்தியாவை பெருமையோடு சொல்வார்கள். ஆனால் இப்போது இந்தியாவுக்கு நேரம் சரியில்லை. இந்திய மருந்துகளை தரமற்றவை என நிராகரிப்பது, மருந்து தொழிற்சாலைகளை மூடச் சொல்வது, தரச் சான்றிதழ்களை திரும்பப் பெறுவது என உலக நாடுகள் அதிரடி காட்டுகின்றன. பெரிய நிறுவனங்கள் பலவும் ஏற்றுமதிக்கு தனியாகவும், உள்ளூருக்குத் தனியாகவும் உற்பத்தி செய்கின்றன. ஏற்றுமதித் தரமே இப்படி என்றால், உள்ளூரில் நாம் சாப்பிடும் மருந்து பாதுகாப்பானதா? * கொழுப்பைக் குறைக்கும் ‘லிபிடர்’ என்ற மாத்திரையை அமெரிக்க மார்க்கெட்டிலிருந்து இந்தியாவின் ரான்பாக்ஸி நிறுவனம் திரும்பப் பெற நேர்ந்தது. மருந்தில்...

உடலுக்கு ஏற்ற ஒன்பது தானியங்கள்!!!

Image
நெல்:-    உமியுடன் கூடிய அரிசி, நெல் எனப்படுகிறது. உமியை நீக்கி அரிசியைப் பயன்படுத்துகிறோம். அரிசியில் பச்சரிசி, புழுங்கல் அரிசி என்பவை குறிப்பிடத்தக்கவை. பச்சரிசி என்பது நெல்லைக் குத்தி அரிசி எடுத்து அப்படியே பயன்படுத்துவதாகும். நெல்லை முறையாக அவித்து குத்தி பெறுவது புழுங்கலரிசி. பச்சரிசி எளிதில் ஜீரணிக்காது. கொழுப்பு சத்தை அதிகமாக்கும். இதனால் உடல் பருமனாகும். உடல் இளைத்தவர்கள் பச்சரிசியை சாப்பிடலாம். வயிறு தொடர்பான நோய் உள்ளவர்கள் பச்சரிசியை தவிர்க்க வேண்டும். புழுங்கல் அரிசி உடல் நலனுக்கு ஏற்றது. மலச்சிக்கல் ஏற்படாது. சம்பா அரிசி வகையில் சீரகச்சம்பா ஆரம்பநிலை வாத நோய்களை போக்க வல்லது. பசியை ஊக்குவிக்கும். ஈர்க்குச்சம்பா அரிசி சாப்பிட ருசியானது. ஆனால் பித்தம்கூடும். குண்டு சம்பா, மிளகு சம்பா, மல்லிகை சம்பா, மணிச்சம்பா, கோரைச்சம்பா, கடைச்சம்பா, குறுஞ் சம்பா போன்றவை மருத்துவகுணம் நிறைந்தவை. சோளம்:-     சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம் சத்துக்கள் அடங்கி உள்ளன. சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்க வல்லது. உ...

அதிசயத் தகவல்கள்.!

Image
* இன்று அனைவரின் கைகளிலும் கையடக்கத் தொலைபேசி இருக்கிறது. அவற்றில் உள்ள சிம் அட்டைகள் பிளாஸ்டிக் என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் தாவரங்களிலிருந்து கிடைக்கும் செலுலோஸ் என்பதிலிருந்து தான் சிம் அட்டை தயாரிக்கப்படுகிறது. * வேகமாகப் போக விரும்பினால், தனியாகப் பயணம் செய். தொலை தூரம் போக விரும்பினால் துணையுடன் பயணம் செய் என்பது ஆப்பிரிக்காவில் பிரபலமாகச், சொல்லப்படும் வாக்கியம். * எந்த விளையாட்டுக்கும் இல்லாத தனிச்சிறப்பு படகுப் போட்டிக்கு உண்டு. பின்பக்கமாகத் திரும்பி வெற்றிக் கோட்டைத் தொடும் ஒரே விளையாட்டு இது மட்டும்தான். * இரவில் தூங்கும்போது படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை ஆங்கிலத்தில் NOCTURNAL ENURESIS என்று குறிப்பிடுவோம். இந்தப் பழக்கத்துக்குப் பெண் குழந்தைகளைவிட அதிகம் ஆளாவது ஆண் குழந்தைகள்தான். * எல்லா வகை ரத்தத்துடனும் சேரும் ரத்த வகை ‘ஓ’ பாஸிட்டிவ் தான். * மகாத்மா காந்தி பற்றி ஜன்ஸ்டீன் சொன்ன புகழ்பெற்ற கருத்து இன்னும் 50 ஆண்டுகள் கழித்து ரத்தமும் சதையும் கொண்ட இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்! * பொது...

ஸ்கேன் பற்றிய ஸ்கேன் ரிப்போர்ட்!!!

Image
நவீன மருத்துவ உபகரணங்களில் ஸ்கேன் முக்கிய இடம் பெறுகிறது அவற்றின் விபரம் வருமாறு. டெஸ்டா எம்ஆர்ஐ ஸ்கேன் காந்த அதிர்வை உடலில் செலுத்தி தேவைப்படும் பாகங்களை குறுக்கு வெட்டாக துல்லியமாக படம் பிடித்து கட்டிகளை கண்டறிய உதவுகிறது. சிடி ஸ்கேன் தலைப்பகுதியின் உட்பாகங்களில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை இந்தக் கருவியின் மூலமாக மட்டுமே துல்லியமாக கண்டறியமுடியும். எக்ஸ்ரேயில் தெரியாத தலையின் எலும்பு உள்பாகங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை இதன் மூலம் கண்டறிந்து அதற்கேற்ற சிகிச்சை அளிக்க பயன்படுகிறது. இந்த கருவி மிகவும் விலை உயர்ந்தது என்பதால் குறிப்பிட்ட பெரிய மருத்துவமனைகள் அல்லது பெரிய மருத்துவ பரிசோதனை கூடங்களில் மட்டுமே உள்ளன. அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் உடலின் உள் அமைப்புகளை முப்பரிமான முறையில் கண்டறிய முடியும். குறிப்பாக திரவப் பகுதியில் ஊடுருவி உடலில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள், கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சி நிலை போன்றவற்றை கண்டறிய மிகவும் உதவுகிறது. கலர் டாப்லர் ஸ்கேன். ரத்த குழாய்கள் வழியாக ஊசி மூலம் மருந்து செலுத்தி குறைபாடுகளை துல்லியமாக கண்டறிய பயன்டுகிறது. எக்கோ இருதய செயல...

இட்லி, தோசை மாவு பாக்கெட் மாவு ஒரு உயிர்கொல்லி!!!

Image
கடந்த 10 ஆண்டுகளில் இட்லி, தோசை மாவை விலைக்கு விற்கும் பழக்கம் விரிவடைந்துக் கொண்டே போகிறது. இட்லி, தோசை மாவு விற்கப்படுவதால் ஒரு புறம் பெண்களின் வேலைச்சுமை குறைகிறது. மறுபுறம் வீட்டில் இருந்தபடியே பணம் ஈட்டும் தொழிலாக மாவு விற்பனை நடைபெறுகிறது.மேலும் சிறிய மளிகைக்கடை முதல் பெரிய ஷாப்பிங் மால் வரை இட்லி, தோசை மாவு பாக்கெட்டுகளில் கிடைக்கிறது. இந்த மாவு ஒரு உயிர்கொல்லி – ஸ்லோ பாய்ஸன் என்பது ஏனோ பலருக்கும் தெரிவதில்லை.இதன் பின் விளைவுகளை சற்று அலசிப் பார்த்தால் நம் உதிரமும் உறைந்து போகும் அளவிற்கு அதிபயங்கரமான விளைவுகள் தெரிய வருகின்றது! 1. 6 நாட்கள் வரை புளிப்பு வாசனை வராமல் இருக்க,நம் உடலில் ஏற்படும் காயத்திற்கும்,புண்ணிற்கும், கேரம் போர்ட் விளையாட பயன்படுத்தும் Boric Acid, ஆரோட் மாவு போன்றவற்றைக் கலந்து விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர். 2. அதாவது ஒரு நாளைக்கு 3 – 6 மணி நேரம் அரைக்க வேண்டிய கிரைண்டர்கள், 12- 18 மணி நேரம் தொடர்ந்து ஓட்டுவதால் அந்த கல் கொஞ்சம் கொஞ்சமாக தேய்மானம் ஏற்பட்டு மாவுடன் கலந்து விடுகின்றது. இதனால் சிறு நீரகத்தில் கல் உண்டாகும் அபாயம் இருக்கின்றது. 3. ...

விளையாட்ட விளையாட்டா நினைக்காதீங்க!!!

Image
விளையாட்டா அப்டின்னா? அப்படி கேட்குற பிள்ளைகள் தான் இப்ப அதிகம். காலை எழுந்தவுடன் படிப்புன்னு சொன்ன பாரதியார், மாலை முழுதும் விளையாட்டுன்னும் சொல்லியிருக்கார். வெளியில் போய் விளையாடுறதுன்னா என்ன என்பதே இப்ப இருக்கிற பிள்ளைங்களுக்கு சுத்தமா தெரியறதில்லை. விடுமுறை விட்டாச்சா பாட்டி வீடு, மாமா வீடுன்னு எதாவது கிராமத்துக்கு போனோமா, கழனியில் குதிச்சு விளையாடுனோமா ஆலமரத்து விழுதை பிடிச்சுத் தொங்கினோமா, கண்ணாம்பூச்சி விளையாடினோமான்னு கழிச்ச போன தலைமுறை மலையேறிவிட்டது. காலையில் ஸ்கூல், அப்புறம் டியூசன், செஸ், டிராயிங், கோச்சிங் கிளாஸ், பத்தாம் வகுப்பு செல்லும் முன்பே அதற்காக சிறப்பு வகுப்புகளுக்கு செல்வது என்பது அவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது. அவர்கள் பொழுது போக்குக்காக தேடுவது வீடியோ கேம், ஆண்ட்ராய்டு செல்லில் கேம் விளையாடுறதை தான். இப்படித்தான் போகுது இப்ப இருக்கிற பசங்களோட டைம். பத்து வயசு பசங்க கூட அம்மா அப்பா தர பாக்கெட் மணியை ப்ரவுஸிங் சென்டர் போய் கேம் விளையாடறதில் கரைக்கறாங்க. குழந்தைகளுக்கு நல்ல உடற்பயிற்சி விளையாட்டுத்தான். விளையாட்டு மனதுக்கும் மூளைக்கும் ரிலாக்ஸ் தருவதுடன...

பாட்டி வைத்தியம்!!!

Image
நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நோய் குணமாகும். இதயமும் வலுவடையும். இஞ்சி சாறு மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மார்பு வலி குணமாகும். குப்பை மேனி இலை, மஞ்சள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்து உடலில் பூசி ஒரு மணிநேரம் கழித்து குளித்தால் தோல் நோய் குணமாகும். நாய் கடித் தால், அந்த இடத் தில் எருக்கண் பாலை விட்டால் விஷம் முறியும். ஒரு டம்பளர் நீரில் இஞ்சி, சீரகம், கருவேப்பிலை ஆகிய மூன்றையும் போட்டு கொதித்த பின்னர், ஆறவைத்து வடிகட்டி குடித்தால் அஜூரணம் குணமாகும். ஆரஞ்ச் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் ஈரல் சம்பந்தமான பிரச்னைகள் தீரும். அன்னாசி பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் கண் நோய் குணமாகும். மஞ்சள் தூள், அருகம்புல் மற்றும் சுண்ணாம்பு கலந்து நகச்சுற்று உள்ள இடத்தில் பூசி வந்தால் குணமாகும். அத்தி பழத்தை தினமும் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும்.